கள்ளக்காதலுக்கு இடையூறு: குழந்தையை கரண்டியால் அடித்து கொன்ற தாய்; காதலனுடன் சேர்ந்து புதைக்க சென்ற கொடூரம்!?

  0
  1
  புவனேஸ்வரி - கார்த்திகேயன்

  உணவு  சாப்பிட மறுத்த குழந்தையை,  தாய் அடித்ததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

   உணவு  சாப்பிட மறுத்த குழந்தையை,  தாய் அடித்ததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  சென்னை அம்பத்தூர் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் தன்னுடைய முதல் கணவரைக் கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில் கார்த்திகேயன் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார். புவனேஸ்வரிக்கு மூன்று வயதில் கிஷோர் என்ற குழந்தை  இருந்துள்ளது.  கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்த இவர்கள் இருவருக்கும்  கிஷோர் இடையூறாக இருந்ததால் குழந்தை கிஷோரை அடிக்கடி அடித்து, உதைத்து வந்துள்ளார் புவனேஸ்வரி 

  baby

  இந்நிலையில்  கடந்த 19-ந்தேதி புவனேஸ்வரியும், கார்த்திகேயனும் உல்லாசமாக இருந்துள்ளனர், இதை பார்த்து   கிஷோர் அழுதுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த புவனேஸ்வரி, குழந்தையைத் தோசை சுடும் மரத்திலான கட்டை கரண்டியால் கன்னத்தில் ஓங்கி அடித்துள்ளார். மேலும் எட்டி உதைத்ததாகத் தெரிகிறது. இதனால் கிஷோர் மயங்கி விழுந்துள்ளான். இதனால் பதறிப்போன கார்த்திகேயனும், புவனேஸ்வரியும் தனியார் மருத்துவமனைக்குக் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். அங்குக் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  arrested

  இதைத் தொடர்ந்து கொலை சம்பவத்தை காவல்துறைக்குத்  தெரியப்படுத்தும் முன்னரே, அவரச அவசரமாகக் கார்த்திகேயனின் சொந்த ஊரான திருவாரூருக்குக் குழந்தையைக்  கொண்டு சென்றதோடு அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளது.  ஆனால்  இது குறித்து தகவல் அறிந்த போலீசார்  கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியதோடு,  புவனேஸ்வரி மற்றும் கார்த்திகேயனை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.