கள்ளக்காதலால் உயிரிழந்த அழகு நிலைய பெண்… அனாதையாய் தவிக்கும் குழந்தைகள்!

  14
  மாதிரி படம்

  கண்ணுக்கு அழகான மனைவி/ கணவன், குதூகலமான குழந்தைகள், நிறைவான வாழ்க்கை என்று ஆசீர்வதிக்கப்பட்டு இருந்தாலும், வாழ்க்கையை வாழத் தெரியாமல் முறையற்ற, தவறான உடல்சார்ந்த தேடலால் பலரும் வாழ்க்கையை அவர்களாகவே கெடுத்துக் கொள்கிறார்கள். உடல் சுகத்தில் தங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வதோடு தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தையும் பெரிய கேள்விக்குறியாய் மாற்றிவிடுகிறார்கள்.

  கண்ணுக்கு அழகான மனைவி/ கணவன், குதூகலமான குழந்தைகள், நிறைவான வாழ்க்கை என்று ஆசீர்வதிக்கப்பட்டு இருந்தாலும், வாழ்க்கையை வாழத் தெரியாமல் முறையற்ற, தவறான உடல்சார்ந்த தேடலால் பலரும் வாழ்க்கையை அவர்களாகவே கெடுத்துக் கொள்கிறார்கள். உடல் சுகத்தில் தங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வதோடு தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தையும் பெரிய கேள்விக்குறியாய் மாற்றிவிடுகிறார்கள்.

  fight

  சோபனா என்கிற பெண்ணுக்கு கணவர் இரண்டு குழந்தைகள் என்று சந்தோஷமான வாழ்க்கை. சுரேஷ்குமார் என்பவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் என்று சந்தோஷமான வாழ்க்கை. உடற்பசியோ, காமமோ, காதல் கண்றாவியோ… இவர்களது முறையற்ற உறவினால், இரு குடும்பங்களிலும் இப்போது குழந்தைகளின் எதிர்காலம் இருட்டில் தள்ளப்பட்டிருக்கிறது.
  திருச்செங்கோட்டில் கணவர் செந்திலுடன் வசித்து வந்த சோபனா, அங்குள்ள பியூட்டி பார்லரில் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். கடந்த 19ம்தேதி காலை வேலைக்குச் சென்ற இவர், வேலை முடித்து மகன் பிறந்தநாளுக்கு துணிகளை வாங்கி வருவதாக சொல்லி விட்டு, அதன் பின்னர் திரும்பவேயில்லை. கடைசிப் பேருந்தை தவற விட்டதால், தனக்குத் தெரிந்தவரின் காரில் வருவதாக சொன்னார் என இவரது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இந்நிலையில் திருச்செங்கோடு அருகே புள்ளிபாளையம் பகுதியில் சோபனா சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். அருகே  மகனுக்கு வாங்கிய துணிகளும், சாக்லேட்டுகளும் இருந்தன.  போஸ்ட் மார்டத்தில் சோபனா கழுத்தை நெறித்து கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், சோபனா வேலை பார்த்து வந்த பியூட்டி பார்லர் கட்டிடத்தின் மேல்மாடியில் போர்வெல் அலுவலகம் வைத்துள்ள சுரேஷ் குமாருடன் இருசக்கர வாகனத்தில் சென்றது தெரிய வந்தது. சுரேஷ்குமாரை விசாரித்த போது, சுரேஷ்குமாருக்கும், சோபனாவுக்கும் கடந்த ஆறுமாதமாக பழக்கம் இருந்து வந்துள்ளது. 

  murder

  எல்லை மீறிய காதலால் இருவரும் இரு குடும்பங்களுக்கும் தெரியாமல் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வந்துள்ளனர். சுரேஷ்குமார் மேலும் சில பெண்களிடம் பேசி வந்தது சோபனாவுக்கு தெரிய வந்துள்ளது. சுரேஷ்குமார்,சோபனாவை தனது ஸ்கூட்டரில் அழைத்து சென்ற போது, மீண்டும் கேள்வி எழுப்பிய சோபனா கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றவே வெறிகொண்ட சோபனா, சுரேஷ்குமாரின் கழுத்தை பிடித்து நெரித்ததால் ஆத்திரத்தில் சோபனாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார் சுரேஷ்குமார். சுரேஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.