கல்லூரி மாணவியை காரில் கடத்திய பள்ளி மாணவர்கள்… கூடா நட்பால் வந்த கேடு!

  0
  5
  ஆள் கடத்தல்

  சென்னையில் கல்லூரி மாணவி ஒருவரை பள்ளி மாணவர்கள் இருவர் உள்பட மூன்று பேர் காரில் அதிவேகமாக கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னையில் கல்லூரி மாணவி ஒருவரை பள்ளி மாணவர்கள் இருவர் உள்பட மூன்று பேர் காரில் அதிவேகமாக கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  car

  சென்னை மாங்காட்டை அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் நேற்று காலை ஒரு ஹூண்டாய் கார் வேகமாக சென்றுகொண்டிருந்தது. அதில் இருந்து பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டது. அதனால் அந்த  கார் சென்ற பகுதியில் உள்ள மக்கள் கார் பற்றி புகார் அளித்தனர். சிறிது நேரத்தில் அந்த கார் சாலை ஓரத்திலிருந்த பள்ளத்தில் சிக்கி நின்றது. காரில் இருந்து பெண் அலறிய சத்தம் கேட்டு காரை தொடர்ந்து வந்தவர்கள், அந்த பகுதி மக்கள் ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது, மூன்று இளைஞர்கள் மாணவி ஒருவரை தப்பிக்கவிடாமல் பிடித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. 

  abuse

  காரில் இருந்து மூன்று இளைஞர்களையும் வெளியே கொண்டுவந்த மக்கள் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். அதற்குள்ளாக அங்கு போலீசார் வரவே, இளம் பெண் மற்றும் அவரை கடத்திய மூன்று பேரை பிடித்துக்கொண்டு போலீஸ்நிலையம் சென்றனர்.
  அப்போது, இந்த பெண்ணை ஒருதலையாகக் காதலித்துவந்த நண்பனுக்கு உதவுவதற்காக சாலையில் தனியாக வந்த அந்த பெண்ணை கடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும், அந்த பெண் தமிழ்நாடு காவல்துறையில் உள்ள ஒரு அதிகாரியின் மகள் என்பதும் தெரியவரவே போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
  தொடர்ந்து விசாரணை நடத்தியபோது ஒருவர் பெயர் அரவிந்த் குமார் என்பதும்,  இரண்டு பேர் பள்ளியில் படித்து வருவது தெரிந்தது. 

  police

  அரவிந்த் குமார் கோடம்பாக்கத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்துவந்த இந்த இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணும் தன்னை காதலிப்பதாக தன்னுடைய நண்பர்களிடம் கூறிவந்துள்ளார். இந்த நிலையில், காதல் விவகாரம் பெண்ணின் வீட்டுக்குத் தெரிந்துவிட்டது. இதனால், அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்துவிட்டார்கள் என்று நண்பர்களிடம் கூறியுள்ளார் அரவிந்த் குமார். அவர்களும் அதை நம்பி, அரவிந்த் குமாரை எப்படியாவது அவரது காதலியுடன் சேர்த்து வைப்பது என்று முடிவு செய்துள்ளனர்.

  choose

  கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று திருமணம் நடத்திவைத்தால், பெற்றோர் ஒப்புக்கொள்வார்கள் என்று நினைத்து அவரைக் கடத்தியுள்ளனர். கடத்தியபிறகுதான் இவ்வளவு நாள் அரவிந்த் குமார் கூறிவந்தது பொய் என்று தெரிந்துள்ளது. அதற்குள்ளாக கார் சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கவே மூன்று பேரும் வசமாக சிக்கினர்.
  மாணவி கடத்தல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அரவிந்த் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற இருவரும் பள்ளி மாணவர்கள் என்பதால் அவர்களை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பினர்.