கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தற்கொலை செய்துகொண்ட 15 வயது சிறுவன்: அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!

  0
  2
  மாதிரிபடம்

  அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த பெண்ணை அறையில் தள்ளி பூட்டிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளான்.

  நொய்டா: இளம்பெண்ணை கத்தியால் குத்திவிட்டு 8 வது மாடியிலிருந்து குதித்து 15 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 21 வயதான இளம்பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். பி.டெக் பட்டதாரியான அப்பெண்ணின்  பெற்றோர் வெளியில் சென்றுவிட  இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

  attack

  அப்போது அந்த அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த 15 வயதான சிறுவன் ஒருவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த அப்பெண்ணை சரமாரியாக குத்தியுள்ளார். அப்போது அந்த அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த பெண்ணை அறையில் தள்ளி பூட்டிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளான். அதற்குள் அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அந்த  பெண்ணை மீட்டு  மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் சிலரோ அந்த சிறுவன் அங்கு இருக்கிறானா என்று தேட, அவன் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் காயங்களுடன் கிடந்துள்ளான். அங்கிருந்தவர்கள் உடனே சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால்  அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். 

  suicide

  இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிறுவன் மாணவியை  கொலை செய்ய முயற்சித்ததன் காரணம்  என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவர் உடல்நலம் தேறி அந்த சிறுவன் யார் என்பது குறித்து கூறினால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.