கல்லூரி மாணவியைக் குத்தி கொலை செய்த திருமணமான வாலிபர்: ஒருதலைக்காதலால் நடந்த விபரீதம்!

  0
  4
  மலர்விழி - முரளி

  ஒருதலைக்காதல் காரணமாக  கல்லூரி மாணவியை  இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  திருச்சி: ஒருதலைக்காதல் காரணமாக  கல்லூரி மாணவியை  இளைஞர் ஒருவர் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  malar

  திருச்சி தென்னூர் அண்ணாநகர் புதுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகியான இவரின்  மகள் மலர்விழி மீரா.  திருச்சியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

  malar

  மலர்விழி மீரா நேற்று கல்லூரி  முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த இளைஞர் ஒருவர் அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் வாக்குவாதம் முற்றவே, மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு மலர்விழி மீராவை அவர் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் குடல் சரிந்து படுகாயம் அடைந்த மாணவியை  அங்கிருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால்  மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள்  கூறினர். மேலும்  இந்த குற்ற சம்பவத்தைச் செய்த அந்த வாலிபரை பொதுமக்கள் அடித்து துவைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  murali

  இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், 
  மலர்விழி மீராவின் உறவினரான முரளிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். அவர் மலர்விழியை ஒருதலையாகக் காதலித்து வந்த நிலையில் அதை அவர் ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. 

  இதைத் தொடர்ந்து இறந்த மாணவியின்  உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டதால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒருதலை காதலால் கல்லூரி மாணவி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.