கல்லூரியில் உரையாற்ற வந்த மத்திய அமைச்சரை தாறு மாறாக தாக்கிய மாணவர்கள்!!!

  5
  Minister Babul supriyo

  நிகழ்ச்சியில் உரையாற்ற வந்த பாபுல் சுப்ரியோவை அக்கல்லூரி மாணவர்கள் கண்ணத்தில் அறைந்து தாறுமாறாக தாக்கியுள்ளனர். 

  கொல்கத்தாவிலும் உள்ள ஜாதவ்புர் பல்கலைக் கழகத்தில், அகில பாரதிய விஷ்வத் பரிசத் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அதனால், அந்த நிகழ்ச்சியில் உரையாற்ற வந்த பாபுல் சுப்ரியோவை அக்கல்லூரி மாணவர்கள் கண்ணத்தில் அறைந்து தாறுமாறாக தாக்கியுள்ளனர். 

  Minister

  மேலும், அவரை வெளியே செல்ல விடாமல் வெகு நேரம் வழி மறித்து நின்றனர். பாபுல் சுப்ரியோவின் பாதுகாவாலர்கள் அவரை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்தும் அவரை மாணவர்களிடம் இருந்து காப்பாற்ற முடியவில்லை. இதனையறிந்த, மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தன்கர் காவல்படையுடன் வந்து மாணவர்களிடமிருந்து  பாபுல் சுப்ரியோவை மீட்டார். 

  இதைப் பற்றி ஆளுநர் மாளிகையில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மாணவர்கள் சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டனர் என்று தெரிவித்துள்ளனர். பா.ஜா.கவின்  மத்திய அமைச்சருக்கு நேர்ந்த வன்முறையினை கண்டித்து பா.ஜா.க வினர் கண்டன பேரணி நடத்தியதாக தகவல்கள் வெளியாகின்றன. 

  BJP Protest