கல்லூரிகளில் ராக்கிங் பிரச்சனை புகாருக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்! 

  0
  2
  கல்லூரிகளில் ராக்கிங்

  ராக்கிங் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலாளர் ரஜினீஷ் ஜெயின் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலத்தின் தலைமை செயலாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

  அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி உயர்கல்வி நிறுவனங்களில் ராக்கிங் செயல்பாட்டை தடுப்பதற்கு பல்வேறு வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக்குழு உருவாக்கியிருக்கிறது.

  ragging

  அதன்படி அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ராகிங் தடுப்பு மையம் அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளாது.
  மேலும், கல்வி நிறுவனங்களில் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரைகள் அந்த வழிகாட்டுதலில் இடம்பெற்றிருந்தன. மேலும்  ராக்கிங் பிரச்சனையால் பாதிக்கப்படும் மாணவர்கள் உடனடியாக புகார் தெரிவிக்க தேசிய அளவில் 18001805522 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.