‘கல்யாணம் பண்ணா அது அவங்க கூட தான்’ : அடம்பிடிக்கும் இளம் நடிகர்; ஓகே சொல்லுவீங்களா சாய் பல்லவி

  0
  9
  சாய் பல்லவி

  கல்யாணம் செய்யணும்னா அது   சாய் பல்லவிதான் என்று வெளிப்படையாகக் கூறினார்

  ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் வருண் தேஜ்  தான் திருமணம் செய்யும் நடிகையின் பெயரை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். 

  தெலுங்கு நடிகர்  வருண் தேஜ். வளர்ந்து வரும் நடிகரான இவர் சமீபத்தில் நடித்த  கட்லகொண்டா கணேஷ் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் தமிழில் வெளியான ஜிகர்தண்டா படத்தின் ரீமேக்காகும். 

  varun

  இந்நிலையில் நடிகர் வருண் தேஜ், நடிகை  லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.அப்போது அவரிடம் நடிகைகள் சாய் பல்லவி, பூஜா ஹெக்டே, ராஷி கண்ணா ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு, இவர்களின் யாரை திருமணமும், யாருடன் டேட்டிங்கும், யாரை கொலை செய்யவும் விருப்புகிறீர்கள்  என்று கேள்வி கேட்கப்பட்டது.

  sai pallavi

  இதற்கும் சற்றும் யோசிக்காமல் கல்யாணம் செய்யணும்னா அது   சாய் பல்லவிதான் என்று வெளிப்படையாகக் கூறினார். அதேபோல்  பூஜா ஹெக்டேவுடன் டேட்டிங்கும், ராஷி கண்ணாவை கொலை செய்ய விரும்புவதாகவும் அவர் ஜாலியாக கூறினார். 

  முன்னதாக தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஃபிதா படத்தில் வருண் தேஜ் – சாய் பல்லவியுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.