கலைஞர், ஸ்டாலினைப் போல  கருப்புக் கண்ணாடியில் உதயநிதி! மிஷ்கின் கொடுத்த ஐடியா!

  0
  1
  உதயநிதி,மிஷ்கின்

  கலைஞரைப் போல எனக்குப் பேசத் தெரியாது என்று ஸ்டாலின் பேசிய பேச்சு கிளப்பியிருக்கும் சர்ச்சையே இன்னும் ஓயந்தப்பாடில்லை. அதற்குள் எதிர்கட்சிகளின் மீம்ஸ் கிரியேட்டர்கள் ஸ்டாலின் புதிதாய் அணிந்திருக்கும் கருப்பு கண்ணாடியை வைத்து மீம்ஸ்களைத் தயார் செய்து பதிவேற்ற ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில், திமுகவின் அடுத்த வாரிசான நடிகர் உதயநிதியும் கருப்புக் கண்ணாடி அணிந்து வலம் வரத் துவங்கியிருக்கிறார்.

  udhayanidhi stalin

  மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் சைக்கோ படம் ரிலீஸுக்குத் தயாராகி நிற்கின்றது. இந்தப் படத்தில் கண் பார்வையற்ற இளைஞராக நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இந்த படம் குறித்து உதயநிதி பேசும் போது, ‘இந்தப் படம் முழுவதும் கருப்புக் கண்ணாடியை நான் கழற்றவே மாட்டேன். கண் பார்வையற்ற இளைஞராக நடிப்பதால், இயக்குனர் மிஷ்கின் தான் இந்த ஐடியாவைக் கொடுத்தார். படத்தில் நடிக்கும்போது கண்களில் அணிவதற்காக, மும்பையில் இருந்து வாங்கிய விசேஷ கான்டாக்ட் லென்ஸ் அணிந்துக் கொண்டு நடித்தேன் என்றார். இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்  உதயநிதி.