கலெக்டரே நினைச்சாலும் மணல் அள்ள அனுமதி தரமுடியாது – உயர்நீதிமன்றம் நிஜமான அதிரடி!

  0
  5
  No more savudu sand

  சவுடு மண் எடுப்பது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய பல்வேறு வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுவதில்லை எனக்கூறி மதுரைக்கிளையின் வரம்பிற்குட்பட்ட 13 மாவட்டங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க தடைவிதித்தனர். ஏற்கெனவே வழங்கிய அனுமதிகளையும் ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  எதில் எல்லாம் பணம் எடுக்க முடியுமோ அவற்றை எல்லாம் கொஞ்சம்கூட சமூக பிரக்ஞை இல்லாமல், எரிகிற வீட்டில் பிடுங்குகிற வரை லாபம்னு நினைக்கிறவர்கள் இருக்கிறவரை அமேசான் காடுகள் தொடர்ந்து எரியத்தான் செய்யும். அமேசான் காடுகளின் தீயை அணைப்பதற்கு நான் என்ன செய்யவேண்டும்? என்னால் முடிந்த சிறு தொகையை அனுப்பிவைக்கிறேன், யாருக்கு அனுப்ப வேண்டும் என பொதுநலத்திற்காக தியாகம் செய்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்கமுடியாதல்லவா? பிரேசில் வரைக்கெல்லாம் போகவேண்டம், இங்க நம்ம ராமநாதபுரத்துல நடக்குற அநியாயத்தைப் பாருங்க.

  Savudu sand

  சித்தார்கோட்டை, குலசேகரன்கால் ஆகிய கிராமங்களிலிருந்து அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சவுடு மண் அள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழவே, மகேந்திரன் என்பவர் அப்பகுதிகளில் மண் எடுக்க தடைவிதிக்கக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலவழக்கு தாக்க செய்தார். சவுடு மண் எடுப்பது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய பல்வேறு வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுவதில்லை எனக்கூறி மதுரைக்கிளையின் வரம்பிற்குட்பட்ட 13 மாவட்டங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க தடைவிதித்தனர். ஏற்கெனவே வழங்கிய அனுமதிகளையும் ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.