கர்ப்பிணியாக்கிவிட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்யவிருந்த மாப்பிள்ளை… திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!

  0
  3
   திருமணம்

  மதுரை, வலையபட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி(29). இவருக்கும் பவித்ராதேவி என்பவருக்கும் இன்று காலை மதுரை மாட்டுத்தாவணி அருகே திருமணம் நடைபெறவிருந்தது. உறவினர்கள் அனைவரும் வந்து சேர்ந்த நிலையில் தாலி கட்டும் நேரத்தில், கையில் குழந்தையுடன் ஒரு பெண் மணமேடைக்கருகே வந்து, ‘நிறுத்துங்க…’ என்று நுழைந்தார். அனைவரும் அதிர்ந்து போய் பார்க்க, வந்தவர் விக்கிரமங்கலத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஈஸ்வரி.

  pregnant

  திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று தனிமையில் வசித்து வந்த ஈஸ்வரிக்கும்(37), முனியாண்டிக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. தன்னை விட வயது மூத்த ஈஸ்வரியுடன் முனியாண்டி ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், வீட்டாருக்கு இது தெரியவர முனியாண்டிக்கு அவரது வீட்டார் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதற்கிடையில் தான் இரண்டு மாதம் கர்ப்பமான விஷயம் ஈஸ்வரிக்கு தெரியவந்துள்ளது. அதை முனியாண்டியிடம் தெரிவிக்க முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கிடையில் தற்செயலாக முனியாண்டியின் நண்பர் ஒருவருக்கு போன் செய்து கேட்ட போது, முனியாண்டிக்கு இன்று திருமணம் என்ற தகவல் தெரிந்துள்ளது. உடனே குழந்தையோடு அங்கு வந்த ஈஸ்வரி திருமணத்தை நிறுத்தி தனக்கு நியாயம் வேண்டும் எனக்கூறி திருமண அரங்கில் நியாயம் கேட்டார். 

  marriage

  ஈஸ்வரியின் குற்றச்சாட்டை முனியாண்டி மறுக்காத நிலையில் அதை கவனித்த மணப்பெண் பவித்ராதேவி, முனியாண்டியை திருமணம் செய்ய மறுத்து, திருமண நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு அவரது பெற்றோரிடம் கூறினார். அதன் பின்னர், தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருதரப்பும் காவல் நிலையம் சென்றனர். தங்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக புகார் தெரிவித்த பவித்ரா தேவியின் தந்தை, பின்னர் இருவரின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு திருமணத்திற்கு தான் செலவழித்த தொகையை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். ஈஸ்வரி உடன் வாழ செல்வதாக முனியாண்டி ஒப்புக்கொண்டதை தொடர்ந்து மூன்று தரப்பும் சமரசமாக பிரச்னையை தீர்த்து கொள்ளுமாறு போலீசார் வலியுறுத்தி அனுப்பி வைத்தனர். விருந்து, விழாக்கோலம் என தடபுடலாக இருந்த திருமண அரங்கம், இறுதி கட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பால் வெறிச்சோடி போனது.