கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்ட கெட்டுப்போன ரத்தம், 15 பேர் பலி – அரசு மருத்துவமனைகளில் தொடரும் அவலங்கள்

  0
  3
  கர்ப்பிணிப் பெண்கள்

  அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு கெட்டுப் போன ரத்தத்தை செலுத்தியதால் 15 கர்ப்பிணிகள் மரணம் அடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

  அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு கெட்டுப் போன ரத்தத்தை செலுத்தியதால் 15 கர்ப்பிணிகள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

  அரசு மருத்துவமனையில் தொடரும் அவலங்கள் 

  அரசு மருத்துவமனைகளில் கவனக்குறைவு காரணமாக ஏராளமான தவறுகள் நடப்பது அடிக்கடி தொடர்ந்த வண்ணம் உள்ளது. வேறு துறைகள் என்றாலும் பரவாயில்லை, மருத்துவமனையில் நிகழும் தவறுகளால் பாதிக்கப்படுவதும், மரணிப்பதும் அப்பாவி பொதுமக்கள் தான்.

  pregnant ladies

  கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட ரத்தம், இறந்த குழந்தையின் உடலை குப்பையில் போட்ட சம்பவம் ஆகியவற்றைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் வரை 4 மாதங்களில் தமிழகத்தின் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி போன்ற அரசு மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கிகள் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தின் மூலம் 15 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  கவனக் குறைவே காரணம் 

   புதிய ரத்தத்துக்கும், பழையதாகி கெட்டுப்போன தகுதியற்ற ரத்தத்துக்கும் உள்ள வேறுபாட்டை மருத்துவ தொழிலில் இல்லாத சாதாரணமான ஒருவரே பார்த்த அளவிலேயை கண்டுபிடித்துவிட முடியும். 

  ஆனால் கெட்டுப்போன ரத்தத்துக்கு பாதுகாப்பானது என்று மருத்துவர்களே நற்சான்று கொடுத்திருப்பதுதான் வேதனையிலும் வேதனை என மருத்துவத்துறை சார்ந்தவர்கள் தங்களது வேதனைகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

  pregnant ladies

  உண்மை கண்டறியும் குழு 

  இந்த தகவலை அடுத்து தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கிகளில் நடத்திய முதல்கட்ட சோதனையில், கெட்டு சிதைந்து போன தகுதியற்ற ரத்தத்தை ஏற்றியதால், கர்ப்பிணிகளும், குழந்தை பெற்ற தாயார்களும் இறந்துபோன விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

  மேலும், தவறான ரத்தம் செலுத்தப்பட்டு கர்ப்பிணிகள் 15 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என்றும், இதுபோன்று கர்ப்பிணிகள் உயிரிழந்திருக்கிறார்களா என்பதை கண்டறிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஸ் கூறினார்.

  blood transfusion

  துறை ரீதியான நடவடிக்கை 

  இச்சம்பவம் குறித்து கடுமையான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த பீலா ராஜேஸ், இதுதொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் எம்.சந்திரசேகர், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர் நாராயணசாமி, ஓசூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சுகந்தா ஆகிய 3 ரத்த வங்கி அதிகாரிகள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்வதோடு, துறை ரீதியான நடவடிக்கையை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

  அவர்கள் தவிர, 12-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் மற்றும் ஆய்வுக்கூட தொழில்நுட்ப வல்லுனர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க 

  அரசு மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை குப்பைத் தொட்டியில் வீசிய அவலம் – நாய் கடித்த நிலையில் மீட்பு

  சுகப்பிரசவத்தின் போது துண்டான குழந்தையின் தலை – கூவத்தூரில் கொடூர சம்பவம்