கர்நாடக அமைச்சரவையில் புதிதாக பதவியேற்ற 17 அமைச்சர்கள்!

  0
  2
  BS Yediyurappa

  கர்நாடகாவில் 17 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

  கர்நாடகாவில் 17 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

  கர்நாடகாவில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, ‌பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தது. கடந்த ஜூலை மாதம் எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்றபோதும், பிற அமைச்சர்கள் இன்னும் பதவியேற்கவில்லை. முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மறைவு, கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளம் போன்றவற்றால், அமைச்சரவை பதவியேற்பு தாமதமானது. 

  இந்நிலையில், ‌அமைச்சரவையில் இடம்‌பெறவிருக்கும் 17 பேர் கொண்ட பட்டியலை முதலமைச்சர் எடியூரப்பா, மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவுக்கு அனுப்பி பரிந்துரைந்தார். இதையடுத்து இந்த 17 பேருக்கும் இன்று காலை பத்தரை மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்யப்பட்டது.. எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில், முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, கே.எஸ்.ஈஸ்வரப்பா, அசோகா,  ஸ்ரீராமுலு உள்ளிட்ட கர்நாடக பாரதிய ஜனதா மூத்த தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. சுரேஷ்குமார், அஷ்வத் நாராயணன், சி.டி.ரவி, மதுஸ்வாமி, காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதா தளம் ‌கூட்டணியிலிருந்து பாரதிய ஜனதா கூட்டணிக்குத் தாவிய ஹெச். நாகேஷ் உள்ளிட்டோரும் அமைச்சர்கள் பட்டியலில் உள்ளனர்.