கர்நாடக அணைகளில் இருந்து காவிரிக்கு வரும் நீர் வரத்து குறைந்தது!

  0
  2
  Mettur dam

  கர்நாடக அணைகளில் இருந்து காவிரிக்கு திறந்து விடப் பட்டிருக்கும் தண்ணீரின் அளவு 50,000 கன அடியில் இருந்து 36,143 கன அடியாக குறைக்கப் பட்டுள்ளது.

  கர்நாடக அணைகளில் இருந்து காவிரிக்கு திறந்து விடப் பட்டிருக்கும் தண்ணீரின் அளவு 50,000 கன அடியில் இருந்து 36,143 கன அடியாக குறைக்கப் பட்டுள்ளது.
   
  தொடர்ந்து பெய்து வந்த கன மழையால் கர்நாடக அணைகளான கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர் அதிகமாக திறக்கப் பட்ட நிலையில் மேட்டூர் அணை முழுக் கொள்ளலவை எட்டியது. இந்நிலையில் தற்போது அந்த அணைகளில் இருந்து வரும் நீரின் அளவு குறைக்கப் பட்டு கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 28,435 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 12,708 கன அடி நீரும் காவிரியில் வெளியேற்றப் பட்டு வருகின்றன. 

  தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68,000 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 65,900 கன அடியாகவும் உள்ளது. மேலும், அணையின் நீர்மட்டம் 120.75 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 94.670 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டலுக்கு 70,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.