கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியை அசைக்க முடியாது! தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் முடிவு

  14
  பா.ஜ.க.

  கர்நாடகாவில் நேற்று 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 8 முதல் 12 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

  கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. குறைந்தபட்சம் 6 இடங்களை கைப்பற்றினால் மட்டுமே ஆட்சியை தக்க வைத்து கொள்ள முடியும். இதனால் பா.ஜ.க. முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசை பொறுத்தவரை இந்த இடைத்தேர்தல் வாழ்வா, சாவா என்ற நிலையில் உள்ளது. அதேசமயம், எதிர்கட்சிகளும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே தங்களது செல்வாக்கை நிருபிக்க முடியும்.

  பா.ஜ.க. முதல்வர் எடியூரப்பா

  கர்நாடகாவில் நேற்று 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒட்டு மொத்த அளவில் 66.59 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து இருந்தனர். மேலும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. குறைந்தபட்சம் 8 இடங்களிலும், அதிகபட்சமாக 12 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தெரிவிக்கின்றன.

  காங்கிரஸ், மதசார்ப்பற்ற ஜனதா தளம்

  கர்நாடகாவின் முன்னணி சேனல்களான  பவர் டி.பி., பப்ளிக் டி.வி. மற்றும் பி டி.வி. ஆகியவற்றின் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளின்படி, 8 முதல் 12 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.க. தனது ஆட்சியை தக்கவைத்தும் கொள்ளும். அதேசமயம் காங்கிரஸ் கட்சி 3 முதல் 5 தொகுதிகளிலும், மதசார்ப்பற்ற கட்சி 1 முதல் 2 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.