கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ‘வைகைப்புயல்’ வடிவேலு பங்கேற்பு

  0
  4
  vadivelu

  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் வைகைப்புயல் வடிவேலு பங்கேற்றுள்ளார்.

  சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் வைகைப்புயல் வடிவேலு பங்கேற்றுள்ளார்.

  திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி காலமானார். அவர் மறைந்ததையடுத்து, திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என அக்கட்சியின் தலைமை முடிவு செய்தது. 

  அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கருணாநிதி சிலை வடிவமைக்கப்பட்டு, அந்த சிலை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திறந்து வைக்கப்பட்டது.

  முக்கிய அரசியல் கட்சியின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்ட அந்த நிகழ்வில், நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், குஷ்பு உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

  அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு, “கருணாநிதியை போன்று எதையும் எதிர்கொள்ளும் சக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். கருணாநிதியை போன்று தைரியம் இருந்தால் எதையும் வென்று விடலாம்” என தெரிவித்தார்.