கம்யூனிஸ்டுகளுக்கு  25 கோடி பணம் எதற்கு? திமுகவிற்கு பயம் எதற்கு..? அதிர வைக்கும் அடுக்கடுக்கான கேள்விகள்..!

  0
  3
  திமுக

  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், திமுக அதன் கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி ரூபாய் பணம் கொடுத்த விவகாரம், பல தரப்பட்ட சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

  இதுகுறித்து, தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாரயணன் திருப்பதி, ’’கம்யூனிஸ்டு 25 கோடி ரூபாய் பணத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? மொத்தம் எத்தனை கோடிக்கு பேரம் நடந்தது? அதில் கருப்புப் பணமாக எவ்வளவு கொடுக்கப்பட்டது? செய்தியாளர்களுக்கு இது குறித்து கருத்து சொல்ல தேவையில்லை என்று ஸ்டாலின் சொல்வது ஏன்?

  narayana balaji

  அரசியலை வியாபாரமாக்கி, அதில் சூதாட்டமாடும் திமுக, இனி மக்கள் முன் ஓட்டுக் கேட்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டது. ஓட்டுக்காக காசு கொடுத்து திருமங்கலம் சூத்திரத்தை அறிமுகப்படுத்திய திமுக, தற்போது கூட்டணி கட்சிகளை விலைக்கு வாங்கி ஜனநாயகத்தை படுகுழி தோண்டி புதைத்து விட்டது. கம்யூனிஸ்டுகளை தங்களின் அடிமைகளாக அறிவித்து விட்டது. கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சியை விலைக்கு வாங்கியதோடு மட்டுமல்லாமல், அந்த கட்சியின் வேட்பாளரை தங்களின் சின்னத்திலேயே போட்டியிட வைத்து தாங்கள் வெற்றி பெற்றதாக கூக்குரலிடுவதற்கு, திமுகவினர் வெட்கப்பட வேண்டாமா? 

  கூட்டணி என்ற பெயரில் பல கோடிகளை கொட்டி கொடுத்த திமுக, இனி சிறிய கட்சிகளை விலைக்கு வாங்கி தன் பணபலத்தால் வளைத்து போடும் அவலத்தை தொடர்ந்து அரங்கேற்றும். இது குறித்து பிரேமலதாவுக்கு கேள்வி கேட்க உரிமையில்லை என்று சொல்கிற ஸ்டாலின் அவர்கள், இனி மற்ற கட்சிகள் குறித்து தான் எந்த காலத்திலும் பேசமாட்டேன் என்று உறுதி சொல்வாரா?அது குறித்து பேசுவதற்கு அச்சப்படும் ஸ்டாலினும், திமுக வினரையும் ஊடகங்கள் கேள்வி கேட்குமா? அல்லது நாங்கள் அழைத்தோம், அவர்கள் வரவில்லை என்ற உண்மையை மக்களிடம் தெரிவிக்குமா?’ என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.