கம்பாளா போட்டியில் அசுர வேகம்…உசைன் போல்ட் சாதனையை முறியடித்த மேலும் 3 வீரர்கள்!

  0
  4
  கம்பாளா

  100 மீட்டர் ஓட்டத்தை 9.58 விநாடிகளில் கடந்திருந்தார். அதை சீனிவாச கவுடா முறியடித்தார் என்று பலரும் பாராட்டி மகிழ்ந்தனர். 

  கர்நாடகாவில் நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டு கம்பாளா.நீர் நிரப்பிய விளைநிலத்தில் இரண்டு எருமைமாடுகளைப் பிடித்தபடி 142 மீட்டர் தூரம் ஓட வேண்டும் என்பதே இந்த விளையாட்டின் விதி. சமீபத்தில் இந்த போட்டியில் கலந்துகொண்ட  சீனிவாச கவுடா என்ற இளைஞர் கம்பாளா பந்தய தூரத்தை 13.62 வினாடிகளில் கடந்தார். இது  100 மீட்டர் தூர ஓட்டமாக  கணக்கிட்டால் 9.55 வினாடிகளில் கடந்ததற்கு சமம். முன்னதாக உலக சாதனை படைத்த உசைன் போல்ட்டே, 100 மீட்டர் ஓட்டத்தை 9.58 விநாடிகளில் கடந்திருந்தார். அதை சீனிவாச கவுடா முறியடித்தார் என்று பலரும் பாராட்டி மகிழ்ந்தனர். 

  ttn

  இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் சுரேஷ் ஷெட்டி என்ற இளைஞர் சீனிவாச கவுடாவை விட வேகமாக ஓடியுள்ளார். அதேபோல் பஜகோலி ஜோகிபெட்டு பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் ஷெட்டி என்பவரும் 100 மீட்டர் தூரத்தை 9.51 வினாடிகளில் கடந்துள்ளார். இவர் மட்டுமில்லாது இன்னும் இரண்டு இளைஞர்களான இருவத்தூர் ஆன‌ந்த் மற்றும் அக்கேரி சுரேஷ் இருவரும் 100மீ தூரத்தை 10 விநாடிகளுக்கு  குறைவான நேரத்தில் கடந்து சாதனை  படைத்துள்ளனர். அதாவது இவர்கள் 9.57 வினாடிகளில் 100மீட்டரை கடந்துள்ளதாக கம்பாளா போட்டியை நடத்தியவர்கள் கூறியுள்ளனர்.

  ttn

  இவர்களை சர்வதேச போட்டிகளில் களமிறக்கினால் கண்டிப்பாக பதக்கம் வெல்வார்கள் என்றுலர் கூறிவரும் நிலையில்,  பாரம்பரிய விளையாட்டு வீரர்களை சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் ஒப்பிட முடியாது என்றும் அதேசமயம் அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்தால் நிச்சயம் அவர்களால் நம் நாட்டுக்கு பெருமை கிடைக்கும் என்றும் சிலர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.