கமுதி: தூக்கில் தொங்கிய மாணவன்… தோள்கொடுத்த நண்பன்! 

  0
  2
  மாதிரி படம்

  கமுதி அருகே தூக்கில் தற்கொலைக்கு முயன்ற மாணவனை சக மாணவன் தோள் கொடுத்துக் காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கருங்குளம் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் சிறுவன் வடிவேல். அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

  கமுதி அருகே தூக்கில் தற்கொலைக்கு முயன்ற மாணவனை சக மாணவன் தோள் கொடுத்துக் காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கருங்குளம் என்ற கிராமத்தைச் சார்ந்தவர் சிறுவன் வடிவேல். அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் படித்துவந்த மாணவன் ஒருவரின் தந்தை சில தினங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். இதனால் சோகத்திலிருந்த அந்த மாணவன், பள்ளி முடிந்ததும் அனைவரும் சென்ற பிறகு பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

  suicide

  அப்போது அங்கு வந்த வடிவேல் ஓடிச்சென்று தூக்கு மாட்டிக்கொண்ட மாணவனை தன்னுடைய தோளில் தாங்கிக்கொண்டார். மேலும், சத்தம் போட்டு உதவிக்கு வரும்படி அழைத்துள்ளார். வடிவேலுவின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து தூக்கில் தொங்கிய மாணவனைக் காப்பாற்றி, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
  சமயோஜிதமாக செயல்பட்டு, பதற்றம் அடையாமல் சக மாணவனின் உயிரைக் காப்பாற்றிய வடிவேலுவின் செயலை ஆசிரியர்கள், பொது மக்கள் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த தகவலை கேள்வியுற்ற ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரெண்டு வருண் குமார், மாணவனை நேரில் வரவழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் புத்தகம் பரிசளித்தார்.