’கமிஷன், கலெக்‌ஷன், கரெப்ஷன்’ இதுவே அதிமுகவின் மூல மந்திரம் – மு.க. ஸ்டாலின்

  0
  3
  MK stalin

  நெல்லை நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட திருக்குறுங்குடி பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

  நெல்லை நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட திருக்குறுங்குடி பகுதியில் திமுக கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

  அப்போது பொதுமக்களிடம் பேசிய அவர், “அம்மா ஆட்சி என சொல்லிக்கொண்டு பிஜேபியின் கைக்கூலிகளாக அடிமைகளாக போய்க் கொண்டிருக்கிறார்கள். “கமிஷன்” “கலெக்சன்” “கரெப்ஷன்” இந்த ஆட்சியில் மூல மந்திரமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை என அனைத்து துறைகளிலும் கமிஷன் பெற்று கொண்டு கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.

  MK Stalin

  அதிமுக ஆட்சி இருந்தால்தான் இந்தி, சமஸ்கிருதம், மதவாதத்தை திணிக்க முடியும் என்று பிஜேபி திணித்து கொண்டு இருக்கிறது. திமுக ஆட்சி காலத்தில் கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்ட பச்சையாறு  அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றப்பட்டது. அதே போல திமுக காலத்தில்  தான் திருநெல்வேலியில் உபரி நீர் கால்வாய் திட்டத்திற்கு 369 கோடி ஒதுக்கப்பட்டது, பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அந்த திட்டத்தை நிறைவேற்றாமல்  கிடப்பில் போட்டுள்ளனர். இதற்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களைப்பற்றி கவலைப்படக் கூடிய கட்சி திமுக. மழை, சூறாவளி பாதிப்பின் போது விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அதற்கான இழப்பீடு தொகையை அதிமுக வழங்கவில்லை, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இழப்பீடு முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசினார்.