கமல் பயங்கர சொதப்பல்… பிக்பாஸ் கடைசி எபிசோட்களை நாகார்ஜூனா தொகுத்து வழங்குவாரா?

  13
  நாகார்ஜூனா

  பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் சில எபிசோட்களே மீதமிருக்கிறது. நாளுக்குநாள், இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் ரசிகர்களிடையே கூடி வருகிறது. ஆனால், நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரையில் எந்த ஒரு கடுமையான சவால்களும் முன்வைக்கப்படவில்லை.

  பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் சில எபிசோட்களே மீதமிருக்கிறது. நாளுக்குநாள், இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பதற்கான சுவாரசியம் ரசிகர்களிடையே கூடி வருகிறது. ஆனால், நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரையில் எந்த ஒரு கடுமையான சவால்களும் முன்வைக்கப்படவில்லை. சிக்கன், கேக், தூக்கம், காதல் பார்வையுடன் கடலைப் போடுவதைத் தவிர பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு வேறு எதுவும் தெரிவதுமில்லை.

  kamal

  அதே போல இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலும், ஏதோ பிக் பாஸ் நிறுவனம் கொடுக்கும் அறிவுரைகளின் படி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் அப்பட்டமாக தெரிந்து வருகிறது. 
  நடிகர் கமலின் இந்த செய்கையால், பிக்பாஸுன் இந்த சீசன் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் தெலுங்கு பிக்பாஸில் நடிகர் நாகர்ஜுனா கமலை விட சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் என்று தமிழ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமே இந்த சீசன் கடந்த இரண்டு சீசன்களை விட மிகவும் போராக போய் கொண்டு தான் இருக்கிறது.

  kamal

  அதே போல நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இம்முறை கமல் நிறைய சொதுப்புவதாகவும், கடந்த இரண்டு சீஸனை போல இல்லை என்றும் எனவே, கமலை எடுத்து விட்டு நாகர்ஜூனாவை ஒரேயொரு  வாரம் மட்டுமாவது தொகுத்து வழங்க செய்யுங்கள் என்றும் ரசிகர்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.