கமல் நாத் அப்படி சொன்னதுதான்….. சிந்தியா வெளியேற காரணம்… உண்மையை வெளியிட்ட எம்.எல்.ஏ.க்கள்…

  0
  5
  ஜோதிராதித்ய சிந்தியா

  விரும்பினால் தெருவில் இறங்கி போராட்டும் என்று சிந்தியா குறித்து முன்னாள் முதல்வர் கமல் நாத் கூறியதுதான் அவர் காங்கிரசிலிருந்து விலக காரணம் என சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.

  [24:18, 3/26/2020] Gps: மத்திய பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவையில் வெற்றி பெற்று ஆட்சியை காங்கிரஸ் பிடித்தது. காங்கிரசின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. இதனால் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமை முதல்வர் பதவியை கமலநாத்துக்கு வழங்கியது. சரி மாநில காங்கிரஸ் தலைவர் பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்த்தவருக்கு அதுவும் கிடைக்காமல் போனது.

  கமல் நாத்

  இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் சிந்தியா காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். இதனால் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. சிந்தியா காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க.வில் அவர் ஏன் இணைந்தார் என்பதற்கான காரணத்தை அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளனர். மத்திய பிரதேசத்தின் முன்னாள் அமைச்சரும், சிந்தியாவின் விசுவாசியுமான டாக்டர் பிரப்ராம் சவுத்ரி கூறுகையில், சிந்தியாவால்தான் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 2018 சட்டப்பேரவை தேர்தலில் சந்தியா மக்களிடம் ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார். வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் தெருவில் இறங்கி போராடுவேன் என அவர் தெரிவித்தார். இதில் என்ன தவறு இருக்கிறது என தெரிவித்தார். 

  காங்கிரஸ்

  மற்றொரு சிந்தியா ஆதரவு முன்னாள் அமைச்சர் மஹிந்திர சிங் சிசோடியா  கூறுகையில், எங்களது தலைவரின் கவலையை தீர்ப்பதற்கு பதிலாக  அவர் விரும்பினால் தெருவில் இறங்கி போராட்டடும்  என முதல்வர் ஊடகங்களில் கூறி சிந்தியாவை அவமானப்படுத்தினார் என தெரிவித்தார். ஆக, விரும்பினால் தெருவில் இறங்கி போராட்டடும் என கமல் நாத் கூறியதுதான் சிந்தியா காங்கிரசிலிருந்து வெளியேறியதற்கு காரணம் என சிந்தியா ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.