கமல்ஹாசன் முன்பு நாடகம் போட்ட லாஸ்லியா

  0
  1
  லாஸ்லியா

  பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

  சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

  பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா மற்றும் மீரா மிதுன் ஆகியோர் வெளியேறினர்.
  அவர்களைத் தொடர்ந்து கடந்த வாரம் எலிமிநேஷனில் அபிராமி, சாக்ஷி, கவின், ரேஷ்மா, மதுமிதா, சரவணன், அபிராமி மற்றும் சாக்ஷி ஆகியோர் வெளியேறியுள்ளனர். 

  இதில் சேரன் மற்றும் லாஸ்லியா வந்த நாள் முதல் அப்பா- மகள் போல் பழகி வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் நாட்கள் செல்ல செல்ல லாஸ்லியா போட்டிக்காகத் தான் அப்பா என்று பழகிக்கிறாரோ? என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

  அதில், பிரூட்டி காலர் ஒருவர் லாஸ்லியாவிடம், ‘சேரன் உங்களை மகளாக தான் பார்த்து பாசம் காண்பிக்கிறார். அதே போன்று உங்களுக்கும் பாசம் இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் சேரன் செய்வது ட்ராமா என்று கவின் சொல்லும் பொது உங்களுக்கு ஏன் கோவம் வரவில்லை? என்று கேட்டார்.

  இதற்கு பதிலளித்த லாஸ்லியா, ‘எனக்கு எது உண்மை என்று தெரியவில்லை. நான் எவளோ பாசம் வெச்சிருக்கன் தெரியும். அதை யாரிடமும் சொல்ல வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்ல நினைக்கிறேன்’ என்று வழக்கம் போல் தனது கண்ணீர் நாடகத்தைக் கமல்ஹாசன் முன்பு நடத்தினார்.