கமல்ஹாசன் ஒருநாள் ஜனாதிபதி ஆவார்! – பிரபு அதிரடி

  0
  12
  Prabhu

  நடிகர் மற்றும் அரசியல்வாதியாக பார்க்கும் கமல்ஹாசனை நாம் அனைவரும் ஒருநாள் ஜனாதிபதியாக பார்ப்போம் என நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். 

  நடிகர் மற்றும் அரசியல்வாதியாக பார்க்கும் கமல்ஹாசனை நாம் அனைவரும் ஒருநாள் ஜனாதிபதியாக பார்ப்போம் என நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். 

  கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அவரது சொந்த ஊரான பரமகுடியில் நடைபெற்று வரும் பிறந்த நாள் விழாவில் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். 

  Kamalprabhu

  இந்நிலையில் இந்த விழாவில் பேசிய நடிகர் பிரபு, கமல்ஹாசன் இன்னும் மாஸ்டர் கமல்தான். எனக்கு தெரிந்த விஷயங்களை விட அதிக தொழில்நுட்ப விஷயங்களும் கமல்ஹாசனுக்கு தெரியும். எனது திரையுலக வாரிசு கமல் மட்டும்தான் என தனது தந்தை சிவாஜியே கூறினார். கமல்ஹாசன் ஜனாதிபதியாக வர வேண்டும் என பலர் விரும்புகின்றனர். நிச்சயம் அவர் ஒருநாள் ஜனாதிபதியாவார்.” என்று கூறினார்.