கமலுடன் நிச்சயம் இணைவேன் – ரஜினிகாந்த் அதிரடி

  0
  1
  rajinikanth

  மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

  மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

  அதிசயத்தால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனதாக ரஜினிகாந்த் கூறிய கருத்திற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.

  ரஜினிகாந்த்

  இந்நிலையில் கோவா செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்து, அதுகுறித்து பதில்கூற விரும்பவில்லை. தேவை ஏற்பட்டால் கமலுடன் இணைவேன். மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்” என தெரிவித்துள்ளார்.