கமலின் கொழுப்பேறிய நாக்கு அறுத்தெறியப்படும் – வசைப்பாடும் அமைச்சர்

  0
  1
  Rajendra balaji

  கமல்ஹாசனின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும் அன பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

  கமல்ஹாசனின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும் அன பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

  நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசினார். இவ்வாறு பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

  இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி. ஸ்டாலின் நான்காவது அணி அல்ல, ஐந்தாவது அணிக்கு கூட திட்டமிடுவார். ரகுலை பிரதமர் வேட்பாளர் என அறிவித்துவிட்டு சந்திரசேகர ராவை ஸ்டாலின் சந்திப்பது குழிப்பறிக்கும் செயல். கமல்ஹாசனின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். சென்னை வெள்ளத்தில் மிதந்த போது கமல்ஹாசன் எங்கே சென்றார். கமல் விஷத்தை கக்குகிறார். அவர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

  சிறுபான்மை வாக்குகளை பெறுவதற்காகவே கமல் இவ்வாறு பேசிவருகிறார். தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது.  அதிமுக ஆட்சியை குறைச்சொல்லும் தகுதி கமலுக்கு கிடையாது. இஸ்லாமியத்தில் யாரோ ஒருவர் தீவிரவாதம் செய்தால் ஒட்டுமத்த சமுதாயத்தையும் குறை சொல்லகூடாது. எந்த மதத்தினரையும் புன்படுத்தக்கூடிய கருத்துகளை பேசக்கூடாது” என்று கூறினார்.