கமலாத்தாள் பாட்டியின் தொழிலுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார்: ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு!

  0
  1
  ஆனந்த் மகேந்திரா

  ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு  உதவ தயார் என்று  மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார். 

  ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள் பாட்டிக்கு  உதவ தயார் என்று  மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார். 

  கோவை மாவட்டம் ஆலாந்துறை – வடிவேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள் என்ற 85 வயது மூதாட்டி. தள்ளாடும் வயதிலும்  இட்லி வியாபாரம் செய்து வரும் இவர்  தானே  உரலில் மாவாட்டி இட்லி சுட்டு வெறும் ஒரு ரூபாய்க்கு அந்த இட்லியை விற்கிறார். பத்து வருடங்களுக்கு முன்புவரை இட்லி ஒன்றை ஐம்பது பைசாவுக்கு விற்றிருக்கிறார். பசிக்காகச் செல்வோருக்குக் குறைந்த விலையில் உணவளித்து பசியை போக்கும் இந்த கமலாத்தாள்  பாட்டி  ஒரேநாளில் இணையத்தில் டிரெண்டானார். கமலாத்தாள் பாட்டியை பலரும் பாராட்டி மகிழ்ந்தார்கள். 

   

  இந்நிலையில் கமலாத்தாள் பாட்டிக்கு மகேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மகேந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ கமலாத்தாள் பாட்டி இன்னும் விறகு அடுப்பில் வேலை செய்து வருகிறார். யாராவது அவர் குறித்து தெரிந்தால் தெரியப்படுத்தவும். அவரின் தொழிலுக்கு தேவையான உதவிகள் செய்யத் தயாராக இருக்கிறேன். அத்துடன் அவருக்கு எல்பிஜி ஸ்டவ் வாங்கித் தரவும் தயாராக இருக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார். 

  kamalathal

  முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி கமலாத்தாள் பாட்டியை நேரில் சந்தித்து அவரை பாராட்டி பரிசு வழங்கியதோடு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.