கனவுக் கோப்பை யாருக்கு…. 91 ஆவது முறையாக மோதும் இங்கிலாந்து vs நியூசிலாந்து

  0
  3
  anna salai

  நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் மகுடம் சூட்டப் போவது என்பதை முடிவு செய்யும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்‌ளன.

  நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் மகுடம் சூட்டப் போவது என்பதை முடிவு செய்யும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்‌ளன.

  லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. இவ்விரு அணிகளும் ஒரு முறை கூட உலகக்கோப்பையை வெல்லாத நிலையில் , புதிய சாம்பியனாக மகுடம் சூடப்போவது யார் என்ற எதிர்பார்ப்பில் ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமும் உள்ளது. இதுவரை உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் 3 முறை தோல்வி கண்டுள்ள இங்கிலாந்து, இம்முறை சொந்த மண் மக்களின் ஆரவாரத்தோடு கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கவுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக  இறுதிப் போட்டிக்கு  முன்னேறியுள்ள நியூசிலாந்து அணி கடந்த முறை தவற விட்ட கோப்பையை, இம்முறை வெல்லும் முனைப்பில் களமிறங்கவுள்ளது.

  சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 90 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இவற்றில் நியூசிலாந்து அணி 43 முறையும், இங்கிலாந்து அணி 41 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டிகள் டையில் முடிந்த நிலையில் , 4 போட்டிகளில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.