கனரா ஏடிஎம்- இல் பணம் எடுக்க போறீங்களா? அப்போ மொபைல் போன் எடுத்துட்டு போங்க பாஸ்!

  0
  7
  ஏடிஎம்

  கனரா வங்கி ஏடிஎம் சென்றால் கட்டாயம் மொபைலை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

  கனரா வங்கி ஏடிஎம் சென்றால் கட்டாயம் மொபைலை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

  ஸ்கிம்மர் மற்றும் ஜாமர் போன்ற தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி போலி ஏ.டி.எம் கார்டுகளைத் தயாரித்து பணத்தைக் கொள்ளையடிக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதைத் தடுக்கும் நோக்கில் கனரா வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

  canara

  அதில், நீங்கள் ஏடிஎம்மில் 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான ரொக்கத்தை எடுக்க விரும்பினால், நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதைப் பதிவு செய்தால் தான் ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும். ஏ.டி.எம். இயந்திரத்தில் பதிவு செய்த பின்னர் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஓ.டி.பி எண்ணைப் பதிவு செய்யாவிட்டால் பணம் கிடைக்காது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

   

  இந்த அறிவிப்பானது கனரா வங்கி ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்கும் கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.