கனமழையின் காரணமாக 3 விமானங்கள் ரத்து : பயணிகள் அவதி !

  13
  Flight

  மழையின் காரணமாகத் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் பருவ மழை வலுவடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாகத் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, வான்வழி சேவையும் பாதிக்கப்பட்டு சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

  madurai

  இன்று காலை மதுரை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டிய 3 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து காலை 7.55 மணிக்குச் சென்னை செல்லவிருந்த Indigo 6E 7215 விமானமும், மதுரையில் இருந்து காலை 8 மணிக்கு ஹைதராபாத் செல்லவிருந்த Indigo 6E 7215 விமானமும், மதுரையில் இருந்து காலை11.50க்கு  பெங்களூரு செல்லவிருந்த Indigo 6E 7217 விமானமும் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.