கனமழையால் பீகாரில் இதுவரை 130 பேர் பலி!

  0
  2
  கனமழை

  வட மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக பீகார் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள்  கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

  பீகார்:  கனமழை காரணமாகப் பீகாரில்   உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. 

  assam

  வட மாநிலங்களில் பெய்த கனமழையால்  கடந்த இரண்டு வாரங்களாக பீகார் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் 13 நகரங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண பொருட்களை தேசிய பேரிடர் மீட்புக்குழு வழங்கி வருகிறது. 

  asam

  இந்நிலையில் பீகாரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 130 ஆக இருக்கிறது. பீகாரில் அடுத்த 24 மணி நேரங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  asam

  அசாமை பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 417 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு வெள்ளம் வடிந்து வருவதால் மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.