கதிகலங்கிய உதயநிதி ஸ்டாலின்! இரண்டு தொகுதி அடி அப்படில!

  0
  1
  உதயநிதி ஸ்டாலின்

  தமிழகத்தில் இரண்டு தொகுதிகளிலும் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் திமுக தோல்வியடைந்ததில் எல்லோரையும் விட அதிகமாக அப்செட்  ஆகியிருப்பவர் உதயநிதி ஸ்டாலின் தானாம். இத்தனைக்கும் இதை விட  படுமோசமான தோல்விகளை எல்லாம் சந்தித்த கட்சி தான் திமுக. ஆனால், வெற்றியும், தோல்வியும் அரசியலில் சகஜம்… ஆனாலும் தொண்டர்களை எப்போதும் உற்சாகமாகவே வைத்திருக்க வேண்டும் என்கிற கொள்கையை வைத்திருந்த கலைஞரிடம் அரசியல் படித்த ஸ்டாலின் இந்த தோல்வியை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. 

  udhayanidhi stalin

  கட்சிக்குள் இந்த இரண்டு தொகுதிகளுக்கான தோல்விக்கு அனைவரும் உதயநிதியைத் தான் கை காட்டுகிறார்களாம். இந்தத் தொகுதிகளில் முழுக்க முழுக்க உதயநிதியின் வழிகாட்டுதல்களின் படி தான் அரசியல் வியூகங்கள் வகுக்கப்பட்டது என்கிறார்கள். சின்னப் பிள்ளையை அரசியல்ல இறக்கி விட்டுட்டு தலைவர் நம்மள பலிகடாவாக்கி வேடிக்கைப் பார்க்குறாரு என்று அறிவாலயத்தில் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளதால் கலக்கத்தில் இருக்கிறாராம் உதயநிதி.
  எப்படியும் உள்ளாட்சி தேர்தலில் மேயராகியே தீர்வது என்று காய்களை நகர்த்தி வந்த உதயநிதிக்கு இந்த இடைத்தேர்தல் தோல்வி பெரிய சரிவைக் கொடுத்திருப்பதால், உதயநிதி, அன்பில் மகேஷ் டீம் தோல்விக்கான புது காரணமாக, இந்துக்கள் திமுகவிற்கு எதிராக இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்களாம்.
  துர்கா ஸ்டாலின் கோயில் கோயிலாக அத்தி வரதரில் ஆரம்பித்து காசி வரைக்கும் சென்றாலும் மக்கள் இன்றும் திமுகவை இந்து எதிர்ப்பு கட்சியாகவே பார்ப்பதாக கருதுகிறார்களாம். முதல் மாற்றமாக கலைஞர் தொலைக்காட்சியில் இருந்து ஆரம்பிக்கிறார்கள். தான் இறக்கும் வரையிலும் எந்தவொரு தீபாவளி பண்டிகைக்கும் கலைஞர் வாழ்த்துச் செய்தியைக் கூறியதே கிடையாது. கலைஞர் தொலைக்காட்சியிலும், அன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள், விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்கிற பெயரில் தான் ஒளிபரப்பாகும். இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் வாங்கிய அடி, திமுகவின் இந்த பண்பாட்டை மாற்ற வைத்திருக்கிறது. இது நாள் வரையில் கலைஞரின்குடும்பத்தினர் வாஸ்து சாஸ்திரத்தில் ஆரம்பித்து ஜாதகம், ஜோதிடம் வரையில் ஈடுபாடு காட்டினாலும், திமுக நேரிடையாக தனது பகுத்தறிவை விட்டுக் கொடுத்ததில்லை. இந்நிலையில் கலைஞர் டிவி யில் தீபஒளி திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என களமிறங்குறார்கள்.