கண்ணீர் வடிக்கும் விஜயகாந்த்… கருப்பு சிங்கத்துக்கு வந்த சோதனை..!

  0
  1
  விஜயகாந்த்

  கட்சியின் எதிர்காலம் பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெரும் கவலையில் இருக்கிறார்.

  கட்சியின் எதிர்காலம் பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெரும் கவலையில் இருக்கிறார்.

  சென்னை, கோயம்பேடு, தே.மு.தி.க., அலுவலகத்தில் சமீபத்தில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ரெண்டு நிமிஷம் மட்டும் பேசிட்டு, தன் அறைக்குள் உட்கார்ந்து விட்டார் விஜயகாந்த்.

  vijayakanth

  கூட்டம் முடிந்ததும், ஒவ்வொரு மாவட்டச் செயலாளரையும் தன் அறைக்கு, விஜயகாந்த் கூப்பிட்டு, சில நிமிஷங்கள் பேசியிருக்கார். அப்போது ‘நான் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி. எப்படியாவது பாடுபட்டு, உள்ளாட்சி தேர்தலில் ஜெயிச்சிடுங்க. 

  அப்பதான் கட்சிக்கு எதிர்காலம் இருக்கும். இல்லேன்னா எல்லாமே போயிடும்’’ என  விட்டத்தை பார்த்து கண்களை உருட்டி, உதட்டை சுறுக்கி, கண்ணீர் விட்டபடி உருக்கமாகச் சொல்லி அனுப்பியிருக்கார்.