‘கண்ணான கண்ணே’ : சாண்டியின் மகள் லாலாவின் க்யூட் வீடியோ!

  0
  13
   சாண்டி

  தன்னை சேர்ந்தவர்களை விட்டுக்கொடுக்காமலிருந்து வந்த ஒருநபர் என்றால் அது சாண்டி தான். குறிப்பாக கவின் -சாண்டி  நட்பு பலரையும் வியக்கவைத்தது. 

  சாண்டியின் மகள் லாலா வீடியோ ஒன்று ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 

  பிக் பாஸ்  நிகழ்ச்சியின் 3வது சீசனில் முகின் பிக் பாஸ் டைட்டிலை வென்றார். கடந்த சீசன்களை  காட்டிலும் பிக் பாஸ் சீசன் 3 பெரிதும் பேசப்பட்டதற்குப் போட்டியாளர்கள் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக சாண்டி.

  sandy

  இயல்பு மாறாமல் அதே சமயம் தன்னை சேர்ந்தவர்களை விட்டுக்கொடுக்காமலிருந்து வந்த ஒருநபர் என்றால் அது சாண்டி தான். குறிப்பாக கவின் -சாண்டி  நட்பு பலரையும் வியக்கவைத்தது. 

  sandy

  அதே சமயம் மகளின் நினைவு வந்ததும்  குழந்தை போல அழுத சாண்டியை  பிக் பாஸ் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட மாட்டார்கள். அந்த அளவுக்கு மகளின் மீது அதீத அன்பு வைத்திருப்பவர் சாண்டி  என்பது அவரது பேச்சு மற்றும் நடவடிக்கை மூலமே நமக்கு தெளிவாகியது.

   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   

  No words?? love you machan ?? @tamilarasandir

  A post shared by SANDY (@iamsandy_off) on

  இந்நிலையில் சாண்டி  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளின் வீடியோகளை  பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சாண்டியின் நண்பர் தமிழ், சாண்டி  மற்றும் அவரது சுசானா மைக்கேல் இருவரின் படத்தையும் கருப்பு மற்றும் வெள்ளைநிறத்தில் அழகாக ஓவியம் தீட்டி வழங்கியுள்ளார்.  அதில் கண்ணான கண்ணே பாடல் ஒலிக்க  ஓவியத்திற்கு லாலா அன்பு முத்தம் கொடுக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.