கண்ணாடி, ஹை ஹீல்ஸ் அணிந்துகொண்டு பெண்கள் வேலைக்கு வரக்கூடாது! 

  0
  8
  girl

  ஜப்பான் நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களும் பெண்கள் கண்ணாடியும், ஹை ஹீல்ஸும் அணிந்துவரக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. 

  ஜப்பான் நாட்டிலுள்ள அனைத்து நிறுவனங்களும் பெண்கள் கண்ணாடியும், ஹை ஹீல்ஸும் அணிந்துவரக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. 

  தற்போது சிறுவயதிலேயே ஊட்டச்சத்து கோளாறு காரணமாக கண்ணில் பிரச்னை ஏற்பட்டு குழந்தைகள் கண்ணாடி அணிகின்றனர். மேலும் செல்போன், தொலைக்காட்சி போன்றவற்றை நீண்ட நேரம் பார்ப்பதும் கண்ணாடி அணிவதற்கு ஓர் காரணமாக சொல்லப்படுகிறது.  ஆனால் கண்ணாடி அணிந்து கொண்டு வேலைக்கு வரக்கூடாது என ஜப்பானிலுள்ள அனைத்து நிறுவனமும் அறிவுறுத்தியுள்ளது.

  girl

  பெண்கள் கண்ணாடி அணிவது அழகை குறைப்பதாக இருப்பதாகவும், கண்ணாடி அணிந்திருப்பது மற்றவர்களை விட அதிபுத்திசாலியாக காட்டுவதால் கண்ணாடி அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு ஜப்பானிய பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கண்ணாடி மட்டுமல்ல பெண்கள் ஹைஹீல்ஸ், குட்டைப்பாவடை போன்றவற்றை அணிந்துவரக்கூடாது என்றும், ஆண்கள் சூட் மற்றும் கருப்பு நிற ஷூக்களை மட்டுமே அணிந்துவர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.