கண்ணயர்ந்த விமானி ! ஆற்றங்கரையில் விமானம் தஞ்சம் ! உயிர் தப்பிய வீரர்கள் !

  0
  15
  flightaccident

  அமெரிக்காவில் நீச்சல் வீரர்களுடன் சென்ற விமானம் தரையிறங்கும்போது எதிர்பாராத விதமாக ஆற்றங்கரைக்கு சென்ற பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  அமெரிக்காவில் நீச்சல் வீரர்களுடன் சென்ற விமானம் தரையிறங்கும்போது எதிர்பாராத விதமாக ஆற்றங்கரைக்கு சென்ற பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  flightaccident

  அமெரிக்காவின் அலாஸ்கா  மாகாணம் அங்கோரேஜ் விமான நிலையத்தில் இருந்து உனாலஸ்கா தீவு டச்சு துறைமுக பகுதிக்கு பென் ஏர்வேஸ் விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பயணிகள் நீச்சல் போட்டி வீரர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

  விமானம் டச்சு துறைமுக விமான நிலையத்தில் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் ஓடுபாதையையும் தாண்டி சுவற்றை உடைத்துக்கொண்டு அருகில் இருந்து ஆற்றங் கரையில் நின்றது. அதிர்ஷ்டவசமாக ஆற்றில் விமானம் செல்லாததால் நீச்சல் போட்டி வீரர்கள், பயணிகள் என அனைவரும் காயம் இன்றி உயிர் தப்பினர்.

  பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விமான நிலைய ஊழியர்களும் , தீயணைப்பு படை வீரர்களும்  விமானத்தில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.  விபத்துக்கான காரணத்தை விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தில் கோளாறு ஏற்பட்டதா அல்லது விமானி தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் விபத்து நிகழ்ந்தா என பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.