கண்டெய்னர் முழுவதும் பிணங்கள் – லண்டனில் டிரைவர் கைது!

  0
  1
  போலீசார்

  கண்டெய்னர் முழுவதும் பிணங்களுடன் லண்டனுக்குள் நுழைந்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்து, கண்டேய்னரை பறிமுதல் செய்த சம்பவத்தினால் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

  லண்டனில் உள்ள பிரபல தேம்ஸ் நதிக்கரை அருகே போலீசார் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன பரிசோதனை நடத்தி வந்தனர். அப்போது வாட்டர்கேல்ட் தொழிற்பேட்டை அருகே சந்தேகப்படும் வகையில் கண்டெய்னர் லாரி ஒன்று வந்தது. இதனை மடக்கிப்பிடிக்க போலீசார் முறிப்பட்டனர். போலீசார் பிடிக்க முயற்சிப்பதை கண்ட லாரி டிரைவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். 

  lorry

  இதனால் போலீசாருக்கு மேன்மேலும் சந்தேகம் அதிகரித்தது. உடனடியாக டிரைவரை தனி அறையில் வைத்து விட்டு, கண்டெய்னரை பரிசோதித்து பார்த்ததில், அதற்குள் சுமார் 35க்கும் மேற்பட்ட பிணங்கள் இருந்ததை கண்டு போலீசாருக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது. உடனடியாக டிரைவரை விசாரித்ததில், இந்த லாரி பல்கேரிய நாட்டைச் சேர்ந்தது என்றும் லாரி டிரைவர் வடக்கு அயர்லாந்தில் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. 

  சுமார் 25 வயது மிக்க இந்த லாரி டிரைவர் பின்னணி என்ன? இந்த பிணங்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது? எதற்காக லண்டனுக்கு நுழைய முயற்சித்தனர்? என்ற கேள்விகள் மற்றும் தேடல்களில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

  மேலும் இந்த பிணங்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. உடலில் ஏதேனும் வெடிமருந்துகள் வைத்து அனுப்பப்பட்டு இருக்கிறதா? இல்லை சட்டத்திற்கு புறம்பாக ஏதாவது கடத்தல் நடைபெற்று வருகிறதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

  தற்போதுவரை லாரி டிரைவர் வட அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்ற தகவலை தவிர வேறு எதுவும் தெரியவில்லை. பிரேத பரிசோதனை முடிவு வெளிவந்த பிறகு தான், எவ்வாறு கொல்லப்பட்டிருக்கின்றனரா அல்லது இறந்திருக்கின்றனரா? என்ற தகவல்கள் தெரியவரும். அதன்மூலம் வேறு கோணத்தில் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு இருக்கின்றனர். 

  திடீரென சுமார் 35க்கும் மேற்பட்ட பிணங்களுடன் லாரி ஒன்று லண்டனுக்கு நுழைந்த தகவல் தெரிந்த பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

  -vicky