கண்களில் கசிந்த ரத்தம்… துபாயில் துடித்த பெண்ணை இரவோடு இரவாக மீட்ட இந்திய தூதரகம்..!

  26
  ஜாஸ்மின் சுல்தானா

  துபாயில் இருந்து ரத்தம் சொட்டச்சொட்ட அழுதபடி தனது கணவனின் கொடுமையில் இருந்து தன்னை காப்பாற்றும்படி கண்ணீர் வடித்த ஜாஸ்மின் சுல்தானா மீட்கப்பட்டுள்ளார்.

  துபாயில் இருந்து ரத்தம் சொட்டச்சொட்ட அழுதபடி தனது கணவனின் கொடுமையில் இருந்து தன்னை காப்பாற்றும்படி கண்ணீர் வடித்த ஜாஸ்மின் சுல்தானா மீட்கப்பட்டுள்ளார். அவர் இந்திய தூதரக நடவடிக்கைக்கு பின் ஷார்ஜா காவல்துறை உதவியுடன் இந்தியாவில் உள்ள பெங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

   

  பல குடும்பங்கள் சிதைந்து நாசமாக போவதற்கு சில ஆண்களின் வக்ர புத்தியே காரணமாக அமைகிறது. மனைவி என்பவள் ஆண்களின் அடிமை என்ற பார்வை இன்னும் பல நாடுகளில் மாறாமல் இருப்பது உச்சக் கட்ட கொடுமை.

  நேற்றைய தினம் துபாய் ஷார்ஜாவில் வசித்து வரும்  ஜாஸ்மின் சுல்தானா என்ற பெண் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான தன்னை தனது கணவர் கொடூரமான முறையில் அடித்து துன்புறுத்துவதாகவும் தன்னை காப்பாற்றும் படியும் குறித்த வீடியோவில் ரத்தம் சொட்டச் சொட்ட அழுதபடி கதறி இருந்தார். 

   

  இதனை பார்த்த பலரும் பகிர்ந்து வருகின்ற போதும் இன்னும் பெண்ணை மீட்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர். பெண்ணின் முகத்தில் ஏராளமான காயங்கள் உள்ளதுடன் கண் பகுதி மோசமாக சிதைந்துள்ளது. இரத்தம் வடிவது வீடியோவில் தெளிவாக உள்ளது. இதனால் கூடிய சீக்கிரம் குறித்த பெண்ணை மீட்க உதவும் படி சமூகநல அமைப்புகள் கோரிக்கை விடுத்து இருந்தன.

  அடுத்த பதிவில் எனக்கு உடனடியாக உதவி தேவை. நான் துபாயில் எனது கணவருடன் வாழ விரும்பவில்லை. எனது சொந்த நாடான இந்தியாவுக்கே செல்ல விரும்புகிறேன்.  5 வயது, 17 மாதத்தில் இரு குழந்தைகள் உள்ளனர்.  நான் எனது சொந்த ஊரான பெங்களூருக்கு செல்ல வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார். 

   

  இந்நிலையில் இந்திய தூதரகம் தலையிட்டு நடவடிக்கை எடுத்து ஜாஸ்மின் சுல்தானாவை மீட்டுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சுல்தானா ’’ ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. நான் உங்கள் உதவியுடன் எனது தாய் நாடான இந்தியாவுக்கு திரும்புக் கொண்டிருக்கிறேன். ஷார்ஜா காவல் அதிகாரிகள் உதவினர். நானும் எனது குழந்தைகளும் பாதுகாப்பாக பெங்களூரு திரும்பி விட்டோம் என தெரிவித்துள்ளார்.