கணவர் மீது துர்நாற்றம் வருகிறது: விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மனைவி!

  0
  5
  விவாகரத்து

  கணவர்  குளிக்காமல் இருந்ததால் மனைவி விவாகரத்து கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

  மத்தியப்பிரதேசம்: கணவர்  குளிக்காமல் இருந்ததால் மனைவி விவாகரத்து  கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

  திருமணம்

  marriage

  திருமணம் செய்துகொண்ட ஜோடி, தங்களுக்குள் பரஸ்பர புரிதல் இல்லை என்று உணர்ந்தால் இருவரும் முடிவு செய்து விவாகரத்து செய்துகொள்கின்றனர். திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்தும் விவகாரத்து வாங்குகிறார்கள். சிலர் ஒரு சில வாரங்களிலேயே பிரிந்து விட்டு விவாகரத்துக்கு விண்ணப்பித்து விடுகிறார்கள். அதற்காக அவர்கள் கூறும் காரணங்கள் சில நேரங்களில் ஏற்புடையதாக இருந்தாலும், சில நேரங்களில் வியப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. 

  குளிக்காத கணவர் விவாகரத்து கேட்ட பெண் 

  divorce

  மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியினருக்குக் கடந்த ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. அப்பெண்ணின் கணவர் ஒரு வார காலமாக குளிக்காமலும், ஷேவ் செய்யாமலும் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த அவரது மனைவி, கணவர் குளிக்காததால்  கணவர் மீது துர்நாற்றம் வருவதாக கூறி  நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இதற்கு அவரது கணவரும் சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால்  பெண் வீட்டாரோ விவகாரத்து வேண்டாம் என்று கூறியும், அப்பெண் அதனை கேட்காமல் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

  புரிதல் இல்லை 

  judge

  இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,  சின்னச் சின்ன காரணங்களுக்காகக் கூட தம்பதியினர் புரிதல் இல்லாமல் விவாகரத்து கேட்பதாகக்  கருத்து  தெரிவித்த நீதிபதி, 6 மாத காலத்திற்குக் கணவன்- மனைவி பிரிந்திருக்குமாறும் அதன்பின் விவாகரத்து வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.  

  முன்னதாக உத்தரப்பிரதேசம் இளைஞர் ஒருவர், மனைவி தன்னை ஷேவ் செய்ய வேண்டும் என நிர்ப்பந்திப்பதாகப்  புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

  இதையும் வாசிக்க: பணக்காரன் போல் நடித்து மாணவியை காதல் வலையில் சிக்க வைத்த கட்டிடத் தொழிலாளி: சிக்கியது எப்படி?