“கணவருக்கு திருநங்கைகளுடன் தொடர்பு…மனைவிக்கு டிக் டாக் மோகம்” தலையில் ஆட்டுக்கல்லை போட்டு மனைவியை கொன்ற கணவன்!

  0
  3
  கொலை

  பின்னரே அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

  கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் குமரவேல். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், வர்‌ஷினி (6), ராகுல் (4) என  இரு பிள்ளைகளும் உள்ளனர்.  கார் ஓட்டுநரான குமரவேல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி அன்வர்‌ஷா நகர் 4-வது தெருவில் உள்ள வாடகை வீட்டுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார்.

  குமரவேல் இரவு நேரங்களில் சவாரிக்கு சென்று வந்த நிலையில்  ராஜேஸ்வரி சிலரிடம் போன் பேசி வருவதை அறிந்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

  ttn

  இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ராஜேஸ்வரியை குமரவேல் இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்த உரல் கல்லை எடுத்து மனைவியின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தனது  குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். 

  மறுநாள் காலையில் பூட்டிய வீட்டிலிருந்து ரத்தம் வழிந்து வெளியே வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுக்கவே  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் பூட்டை உடைத்து வீட்டில் சடலமாக கிடந்த ராஜேஸ்வரியின் உடலை மீட்டனர். பின்னரே அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 

  ttn

  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குமரவேலுக்கு சில திருநங்கைகளுடன் தொடர்பு இருந்துள்ளது. அதே சமயம்  ராஜேஸ்வரி டிக்-டாக் மோகத்தில் மூழ்கியுள்ளார். இதனால் சிலருடன் நட்பு ஏற்பட்டு போனில் பேசிவந்துள்ளார். இதை குமரவேல் கண்டிக்க, ராஜேஸ்வரியும் திருநங்கைகளுடன் தொடர்பை  விட்டுவிடு என்று கூறி சண்டையிட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தினமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து காதலர் தினத்தன்று காலையில் வெளியே சென்ற ராஜேஸ்வரி இரவு தான் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குமரவேல் மனைவியை திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.

  இதை தொடர்ந்து  2 குழந்தைகளுடன் தனது சொந்த ஊரான காடாம்புலியூருக்கு சென்ற குமரவேல் குழந்தைகளை தனது தாய் வீட்டில் விட்டுவிட்டு சென்ற நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.