கணவருக்காக காத்திருந்த 59 வயது பெண் நடுரோட்டில் சுட்டுக் கொலை..!

  0
  1
  representative image

  கணவருக்காக கோயில் வாசலில் காத்திருந்த பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  கணவருக்காக கோயில் வாசலில் காத்திருந்த பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  டெல்லியை சேர்ந்தவர் உஷா சாஹினி. இவர் சனிக்கிழமை அன்று தனது கணவருடன் காரில் மருத்துவமணைக்கு செல்ல இருந்தார். அப்போது வழியில் ஒரு கோவிலில் காரை நிறுத்தினர். தனது கணவர் கோயிலுக்கு சென்று வழிப்பட்டு வருவதாக கூறிச் சென்றார். அவர் கோயிலுக்குள் நுழைந்த அடுத்த கனமே பலத்த துப்பாக்கிச்  சத்தம் ஒன்று கேட்டது. பைக்கில் ஆயுதங்களுடன் வந்த அடையாளம் தெரியாத நபர் சஹானியை சுட்டு விட்டு, சில நொடிகளில் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சாஹனியை மீட்டு மருத்துவமணையில் சேர்த்தனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.சுட்டுக் கொலை

  இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுப்பட்டனர். உடனடியாக தடயவியல் பிரிவு வல்லுநர்களும் அங்கு விரைந்து வந்து கைரேகைகள் மற்றும் ஆதாரங்களை திரட்டினர். 

  முன்பு இந்த மாதத் தொடக்கத்தில் 40 வயது ரவுடி ஒருவர் இதே போன்று  சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  உஷாவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் குற்றவாளி கண்டுப்பிடிக்கப்படுவார் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்