கணவனும், மனைவியும் சந்தோஷமாக இருப்பது எப்படி?

  0
  19
  கணவன் மனைவி

  தவறு செய்யாத மனிதர்களே இல்லை என்பது தான் உண்மை. அதனால் பிறர் தவறு செய்வதை பொருட்படுத்தாமல் விட்டு கொடுத்து பழகுவது தான் மனிதர்களுக்கு அழகு.  அதனால் தான் முன்னோர்கள் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். எல்லோர் வீட்டிலும் புகைச்சல் வரத்தான் செய்கிறது. ஒருவருக்கொருவர்  விட்டுக் கொடுத்து போனால் வாழ்க்கை வசந்தமாக இருக்கும்.  

  தவறு செய்யாத மனிதர்களே இல்லை என்பது தான் உண்மை. அதனால் பிறர் தவறு செய்வதை பொருட்படுத்தாமல் விட்டு கொடுத்து பழகுவது தான் மனிதர்களுக்கு அழகு.  அதனால் தான் முன்னோர்கள் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். எல்லோர் வீட்டிலும் புகைச்சல் வரத்தான் செய்கிறது. ஒருவருக்கொருவர்  விட்டுக் கொடுத்து போனால் வாழ்க்கை வசந்தமாக இருக்கும்.  

  husband and wife

  ஒரு கிராமத்தில் கணவனும், மனைவியும் வசித்து வந்தார்கள். அவர்கள் வீட்டில் செல்வத்திற்கு பஞ்சமில்லை. ஆனாலும், இருவருக்குள்ளும் எப்பொழுதும் மனம் ஒத்துபோகாமல் இருந்தது. இருவருமே விட்டுக்கொடுக்காமல் முரண்டு பிடித்தார்கள். நாள்தோறும் ஏதாவது ஒரு பிரச்சனையைக் காரணம் காட்டி சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். கணவனுக்கோ வாழ்க்கையில் எதுவும் தேவையில்லை. என் மனைவியோடு சண்டை போடாமல் இருந்தாலே போதும் என்றிருந்தது. 

  husband and wife

  ஒரு நாள், அந்த கிராமத்திற்கு, பெரியவர் ஒருவர் தனது மனைவியுடன் வந்திருந்தார். திருவள்ளுவரும் வாசுகியும் போல் சேர்ந்திருப்பதாக எல்லோரும் அவர்களைப் பற்றி பெருமையாக சொன்னார்கள். இவர்கள் மட்டும் எப்படி இவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று தெரிந்து வரலாம் என்று சென்றான் கணவன். திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவர், இவனைக் கண்டதும் வரவேற்று அமர வைத்தார். எனக்கும் என் மனைவிக்கும் ஒத்துப்போகலைங்க ஐயா… என்ன செய்தாலும் எங்களுக்குள்ள வர்ற சண்டைகளை தவிர்க்கவே முடியலை சாமி. சண்டையில்லாமல் எப்படி வாழ்றதுன்னு தெரியவில்லை. நீங்க தான் தீர்வு சொல்ல வேண்டும் என்று புலம்பினான். பெரியவர், அவன் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. சிறிது நேரம் இங்கேயே உட்கார்ந்திரு என்று மட்டும் சொன்னார். 

  old couple

  சிறிது நேரம் கழித்து பெரியவர் தன்னுடைய மனைவியை அழைத்தார்.  இருவரும் பேசிக்கொண்டிருக்கிறோம். முகம் பார்த்து பேச வெளிச்சம் போதவில்லை. ஒரு விளக்கு பொருத்தி எடுத்து வா என்றார். அவர் மனைவி உள்ளே சென்று விளக்கை எடுத்து வந்து வைத்தார். இவனுக்கு ஆச்சர்யம்  பட்டப்பகலில் சூரியனின் வெளிச்சத்தில் எதற்கு விளக்கு. அதோடு அவரது மனைவியும் எதையும் பேசாமல் கொண்டு வந்தது இன்னும் மேலும் ஆச்சரியத்தை அளித்தது.
  இன்னும் சிறிது நேரம் கழித்து இருவருக்கும் மோர் கொண்டு வந்து தந்தாள். மோரை வாங்கி வாயில் வைத்தான். உப்பு மிதமிஞ்சி இருந்தது. வாயில் வைக்க முடியாத அளவுக்கு  மிதமிஞ்சி இருந்ததையும் பெரியவர் எதுவுமே சொல்லாததையும் ஆச்சரியத்தோடு பார்த்தான். உள்ளிருந்த மனைவியை அழைத்து மோர் தம்ளரை கொடுத்தவர் உப்பு மிகச்சரியாக இருந்தது என்றார். அவரது மனைவி மகிழ்ச்சியோடு உள்ளே சென்றார்.

  old couple

  ஐயா, தாங்கள் நடந்துக் கொள்வது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. வெளிச்சத்தில் விளக்கு கேட்கிறீர்கள், அதிக உப்பு உள்ள மோரில் உப்பின் அளவை சரியாக இருக்கிறது என்று கூறுகிறீர்கள். எனது கேள்விக்கும் பதில் அளிக்கவில்லையே என்றான்.
  குடும்பத்தில் மட்டுமல்ல சுற்றத்திலும் ஒருவர் குற்றத்தை ஒருவர் பெரிதுபடுத்தாமல் இருக்க வேண்டும். அனுசரித்து விட்டுக்கொடுத்து போக வேண்டும். அப்படி இருந்தால் வாழ்வில் எத்தனையோ பிரச்னைகளை சந்திக்காமலே இருக்கலாம் என்றார் பெரியவர்.
  அதுநாள் வரையில், நான் மட்டுமே ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்த கணவன், மனம் மாறினான். சில நாட்களில், எது செய்தாலும் பாராட்டுகிற கணவனின் செயலைக் கண்டு மனந்திருந்தினாள் மனைவி. இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை வாழத் தொடங்கினார்கள். 
  விட்டுக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் சந்தோஷம் இருக்கிறது.