கட்டிப்பிடி ஹீரோயினின் உருக்கமான வீடியோ

  0
  4
   மும்தாஜ்

  டி.ஆர். மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி, ‘குஷி’, ‘மலை மலை’ போன்ற படங்களின் மூலம் பிரபலமான நடிகை மும்தாஜ் டி.ராஜேந்தர் ஸ்டைலில் உருக்கமாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

  டி.ஆர். மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி, ‘குஷி’, ‘மலை மலை’ போன்ற படங்களின் மூலம் பிரபலமான நடிகை மும்தாஜ் டி.ராஜேந்தர் ஸ்டைலில் உருக்கமாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.

  mumtaj

  கடந்த சில வருடங்களாக திரையுலகில் இருந்து விலகியிருந்த மும்தாஜ் ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் நுழைந்த போது ரசிகர்களுக்கு பெரிய ஷாக். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் மும்தாஜ் ரீ என்ட்ரி கொடுத்த போது, ரசிகர்களும் பெரிய ஆதரவை அவருக்கு தந்தனர். 
  இந்நிலையில், பிக்பாஸ்ஸில் தன்னுடைய பயணம் தொடங்கி ஒரு வருஷம் முடிவு பெற்றுள்ள நிலையில், ‘பிக் பாஸ்’ பயணம் தொடங்கியது பற்றியும், அதன் மூலமாக தமிழக மக்கள் கொடுத்திருக்கும் வரவேற்பு பற்றியும் பேசி ஒரு வீடியோவாக அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மும்தாஜ்.

  mumtaj

  “இந்த தேதியில் தான்  உங்க வீட்டுக்குள் வந்தேன். நீங்கள் எல்லாரும் உங்களோட மனசுக்குள் இடம் கொடுத்திருக்கீங்க. உங்களோட பிரார்த்தனைகள் தான் என்னை அந்த வீட்டில் தங்க வைத்தது. நான் சந்தோஷமாக இருந்தப்போ நீங்க சந்தோஷமாக இருந்தீங்க. நான் வருத்தப்பட்டப்போ நீங்களும் என் குடும்பத்தில் ஒருத்தராக நின்னு எனக்காக வருத்தப்பட்டீங்க. நான் எவ்வளவு சந்தோஷமாக இருக்கேன்னு சொல்றதுக்கு வார்த்தைகள் இல்லை. நான் இத்தனை வருஷமா சினிமா வாழ்க்கையில் எந்த சமூகவலைதளத்திலும் என்னை இணைச்சுக்கிட்டது கிடையாது. ஆனால் இப்போ உங்களில் ஒருத்தியாக என்னை மாத்திக்கிறதுக்காக சமூக வலைதளங்களிலும் என்னை இணைச்சிருக்கேன்” என்று உருக்கமாக நன்றி சொல்லியிருக்கிறார் மும்தாஜ்.
  ஏற்கெனவே திரையுலகில் இருக்கும் நடிகைகள் வெளியிடுகிற அரைகுறை ஆடைகளுடன் எடுக்கும் செல்ஃபி போட்டோக்களாலும், ஆடைகளே இல்லாமல் பரபரப்புக்காக வெளியிடும் வீடியோக்களாலும் சமூக வலைதளங்கள் திக்குமுக்காடி ஸ்தம்பித்திருக்கிறது. இந்நிலையில் மும்தாஜுன் வருகையை ஆரவாரமாகக் கொண்டாடி வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.