கட்சி ஆரம்பித்து ஒரு ஆணியும் புடுங்க முடியல… ஆளை விடுங்கடா சாமி… தெறித்து ஓடும் டி.டி.வி..!

  0
  1
  டி.டி.வி.தினகரன்

  அமமுகவை விட்டு நிர்வாகிகள் விலகி செல்லும் நிலையில் வேலூரில் நடக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டது டி.டி.வி.தினகரன் அணி.

  அமமுகவை விட்டு நிர்வாகிகள் விலகி செல்லும் நிலையில் வேலூரில் நடக்கும் மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டது டி.டி.வி.தினகரன் அணி.eps

  ஆகஸ்ட் 5-ஆம் தேதி வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக சார்பில் கூட்டணி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகமும்,  திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்தும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.  ttv

  நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் களத்தில் குதிக்கிறார். இந்த நிலையில் வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடவில்லை என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். நிர்வாகிகள் நாளுக்கு நாள் விலகி செல்லும் நிலையில், இதுகுறித்து டி.டி.வி.தினகரன்  விருத்தாசலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’ வேலூர் மக்களவைத் தொகுதியில் நடைபெறும் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என அமமுக முடிவு செய்துள்ளது. ttv

  வேலூர் மக்களவை தேர்தலை தொடர்ந்து நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு சின்னத்தில் போட்டியிடுவது சற்று சிக்கலாக இருக்கிறது. குக்கர் சின்னம் எனவே கட்சியை பதிவு செய்து நிலையான சின்னம் கிடைத்தவுடன் தான் அடுத்து வரும் தேர்தலில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது’’ எனக் கூறியுள்ளார்.