கட்அவுட்டில் உதயநிதி; மூத்த உடன்பிறப்புகள் வருத்தம்?!

  0
  1
  உதயநிதி ஸ்டாலின்

  திமுக வாரிசு அரசியல் செய்கிறது என்ற விமர்சனம் பொது வெளியில் வைக்கப்படும் வேளையில், பெரிதாய் களப்பணி செய்யாத உதயநிதி முன்னிலைப்படுத்தப்படுவது திமுக மூத்த உடன்பிறப்புகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை: திமுக வாரிசு அரசியல் செய்கிறது என்ற விமர்சனம் பொது வெளியில் வைக்கப்படும் வேளையில், பெரிதாய் களப்பணி செய்யாத உதயநிதி முன்னிலைப்படுத்தப்படுவது திமுக மூத்த உடன்பிறப்புகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  திமுக வாரிசு அரசியல் செய்கிறது என்ற விமர்சனம் பொது வெளியில் வைக்கப்படும் வேளையில், பெரிதாய் களப்பணி செய்யாத உதயநிதி முன்னிலைப்படுத்தப்படுகிறார் என்ற குற்றச்சாட்டு சமீப காலமாய் அதிகரித்து வருகிறது. 

  இதுகுறித்து மூத்த உடன்பிறப்பு ஒருவர், கழகத்திற்கு நீண்ட நாட்கள் உழைத்து களப்பணியாற்றிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் சென்னை மேயர் மா.சுப்பரமணியம் இன்னும் பிற இளைய தலைமுறையினருக்கு இதுபோன்ற கட்அவுட் வைத்ததுண்டா?, 

  udhay

  திரு.உதயநிதி திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் மகன் என்ற தகுதியை தவிர கழகத்திற்கு அவர் ஆற்றிய களப்பணி விவரங்கள் என்ன? அவருடைய அப்பா, தாத்தாவிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ததெல்லாம் தகுதி கிடையாது.முரசொலி நிர்வாக இயக்குனர் என்ற தகுதி என்றால் அது நியமன பதவி.அதன் வளர்ச்சிக்கு கூட அவருடைய உழைப்பு இல்லை என்று தான் கூறுவேன். இதற்கு முன் நிர்வாக இயக்குனராக இருந்த திரு கலாநிதி மாறனுக்கோ, திரு.முரசொலி செல்வத்திற்கோ இதுபோன்ற திமுக நிகழ்ச்சிகளில் திமுக தலைவருக்கு நிகரான கட்அவுட் வைத்ததில்லை.ஆக எந்த தகுதியும் இல்லாத திரு உதயநிதி அவர்களுக்கு தலைவருக்கு நிகரான கட்அவுட் வைப்பதை எப்படி எடுத்துக் கொள்வது.திமுக வளர்ச்சிக்கு நல்லதில்லை. பொதுமக்கள் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். திமுக வாக்குகள் மட்டுமே கிடைத்தால் போதும் என்று நினைத்தால் அதிகாரத்திற்கு வரமுடியுமா? நடுநிலை வாக்குகள் தேவையில்லையா? புதிய தலைமுறையினரின் நம்பிக்கை பெற தேவையில்லையா?ஏதோ சில ஆர்வ கோளாறுகள் இந்த காரியத்தை தலைமையின் கவனத்தை ஈர்க்க இப்படி செய்து விட்டார்கள். விரைவில் கட்அவுட் இறக்கப்படும் என்று பதில் சொல்வார்கள்.ஆனால் இது தொடர்ந்து திட்டமிட்டு நடக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. இதற்கு முடிவு கட்ட வேண்டியது திமுக தலைவரின் கட்டளையில்தான் உள்ளது.
   

  திமுகவிற்காக பல நெருக்கடிகளுக்கு ஆளான தலைவர் திரு.ஸ்டாலின் அதற்கு பிறகு பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகுதான் இளைஞர் அணி பொறுப்புக்கு வர முடிந்தது.கலைஞர் நினைத்திருந்தால் திரு.ஸ்டாலின் அவர்கள் முதல்முறை சட்டமன்ற உறுப்பினராக ஆனபோதே  அமைச்சராக்கி இருக்கலாம். அவரும் அதனை செய்யவில்லை. திரு ஸ்டாலின் அவர்களும் விரும்பவில்லை. அதற்கும் சட்டமன்ற உறுப்பினர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் பதவி என்று பயிற்சி எடுத்த பிறகுதான் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு ஆனபோது அமைச்சரவையில் இடம்பெற்றார். இப்படி கட்சி ஆட்சி என்று இரண்டிலும் படிப்படியாகதான் பொறுப்புகளுக்கு வந்துள்ளார்.ஆனால் இப்போது நடப்பது எதுவும் விரும்பத்தகுந்த செயல்களாக தெரியவில்லை.இதையெல்லாம் ஆதரித்தாலோ கண்டும் காணாமல் இருந்தாலோ மாற்றுக் கட்சிகளை விமர்சனம் செய்யும் தகுதியை இழந்து விடுகிறோம் என பதிவு செய்துள்ளார்.