கடை திறக்காததால் கடுப்பான குடிமகன்கள்! டாஸ்மாக்குகுள் புகுந்து ஆட்டயப்போட்டதால் பரபரப்பு…

  0
  1
  டாஸ்மாக்

  கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏப்ரல் 14 தேதி வரை எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டது. 

  இந்நிலையில் அரியலூரிலுள்ள 2 டாஸ்மாக் கடையிலிருந்து சுமார் ஒரு லட்சத்து 50  ஆயிரம் மதிப்பிலான மதுபானங்கள் திருட்டுப் போயுள்ளதாக காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். அரியலூர் அருகே தவுத்தாய்குளம் கிராமத்தில்  டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.  144 தடை உத்தரவை அடுத்து அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

  டாஸ்மாக்

  இந்த சூழ்நிலையில் இன்று கடையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான மது பானங்கள் திருடப்பட்டுள்ளது. மேலும் கீழகாவட்டாங்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடையிலும் பூட்டை உடைத்து 30 ஆயிரம் மதிப்பிலான மதுபானங்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதையடுத்து சம்பவ இடங்களுக்கு சென்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.