கடைசி நொடியில் உயிர் தப்பிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி!! விமான கோளாறு என தகவல் 

  0
  6
  நிதின் கட்காரி

  மத்திய அமைச்சர் நிதின் கட்காரி டெல்லிக்கு செல்ல இருந்த விமானம் கடைசி நொடியில் கோளாறு என கண்டறியப்பட்டதால் உயிர் தப்பினார்.

  நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி வரை செல்லவிருந்த இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் இன்று காலை தயார் நிலையில் இருந்தது.

  nithin gadkari

  மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உட்பட பல பயணிகளும் பயணிக்க இருந்தனர். இன்று காலை பயணிகளை அழைத்து கொண்டு ரன் வே-இல் விமானம் சென்றுகொண்டிருக்கையில் வானுயர பறக்க முயற்சி செய்தபோது, அதை ஓட்டிச்சென்ற பைலட் விமானத்தில் ஏதோ கோளாறு இருப்பதை உணர்ந்துள்ளார். 

  இதனால் உடனடியாக, மேலும் ஏதேனும் தவறுகள் நடைபெறுவதற்கு முன்னர், பைலட் விமானத்தை தரை இறக்கி மீண்டும் நாக்பூர் விமான நிலையத்திற்கு உள்ளேயே எடுத்துச் எடுத்துச் சென்றார். அதன் பிறகு பயணிகள் கீழே பத்திரமாக இரக்கப்பட்டு, விமான நிலையத்திற்குள் தனி அறையில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுடன் உடன் சென்ற மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருந்தார்.

  air indigo

  இண்டிகோ நிறுவனத்தின் விமானம் இதுபோன்று கோளாறு ஆவது முதல் முறை அல்ல. முன்னதாக, இதே மாதம் ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று 143 பயணிகளுடன் மும்பையில் இருந்து லக்னோவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆதலால், விமானத்தை பத்திரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. இதனை இண்டிகோ நிறுவனமும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.