கடினமான இந்த நேரத்தில் மருத்துவ மற்றும் காவல் துறை பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க…. நாட்டு மக்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்

  0
  8
  அமித் ஷா

  தொற்று நோய் அச்சுறுத்தல் உள்ள இந்த கடினமான நேரத்தில், மருத்துவ மற்றும் காவல் துறை பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதோடு அவர்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்யும்படி நாட்டு மக்களுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  தொற்று நோயான கொரோன வைரஸ் பரவலுக்கு எதிராக மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அதேசமயம் அரசுகளின் உத்தரவுகளை பொதுமக்கள் பின்பற்றினால்தான் கொரோனா வைரஸ் எதிரான நடவடிக்கைகள் வெற்றி பெறும். 

  மருத்துவர்கள்

  இந்திலையில், மருத்துவ மற்றும் காவல்துறை பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி பொதுமக்களுக்கு அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இது தொடர்பாக கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக தங்களது உயிரை பணயம் வைத்து இரவு மற்றும் பகல் பாராமல் போராடும்  அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்கள், நோயியல் நிபுணர்கள் மற்றும் காவல் துறை பணியாளர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். 

  காவல்துறையினர்

  இந்த கடினமான காலங்களில் அவர்களுடன் ஒத்துழைத்து மற்றும் அவர்களின் ஆரோக்கியத்துக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என தெரிவித்தார். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருந்தாலே மருத்துவ மற்றும் காவல்துறை பணியாளர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.