கடித்த பாம்பை கையில் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடிய பெண்; காரணம் இதுதானாம்!

  0
  2
  சுல்தானாகான்

  கடித்த பாம்புடன் தாயும் மகளும் மருத்துவமனைக்குச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  மும்பை: கடித்த பாம்புடன் தாயும் மகளும் மருத்துவமனைக்குச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  மும்பை தாராவி பால்கிபூர் என்ற பகுதியில்  குடும்பத்துடன் வசிப்பவர் சுல்தானாகான். மும்பையில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்ததால் அங்கு பூச்சி மற்றும் பாம்புகள் தொல்லை இருந்துள்ளது. இந்நிலையில் சுல்தானாகான் குடும்பத்துடன் அமர்ந்து கொண்டு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகள் என்னை ஏதோ  கடித்து விட்டது என்று அலறி துடிக்க, எலியாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்த போது  அங்கு பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.

  mumbai

  இதை கண்டு அதிர்ச்சியடைந்த சுல்தானாகான் அந்த பாம்பை கையில் பிடித்து கொண்டும், மகளை அழைத்துக் கொண்டும் அங்குள்ள மருத்துவமனை ஒன்றிற்குச் சென்றுள்ளார். அங்கு அவரது மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு   வருகிறது. 

  இது குறித்து பேசிய சுல்தானாகான்,  மழை பெய்ததால் அருகில் உள்ள பூங்காவிலிருந்த பாம்புகள் வீட்டுக்குள் புகுந்து விட்டது.எந்த வகையான பாம்பு கடித்தது என்று தெரிந்தால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க சுலபமாக இருக்கும் என்று நினைத்துத் தான் பாம்பை கையோடு கொண்டு சென்றேன்’ என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.