கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு, மனைவியை கொன்ற கணவன்: சென்னையில் நடந்த கொடூரம்!

  0
  5
  மாரியப்பன் - விக்னேஷ்வரி

  மனைவியை கொலை செய்து விட்டு, தற்கொலை என கணவன் நாடகமாடிய சம்பவம் ஒன்று சென்னையில் அரங்கேறியுள்ளது. 

  சென்னை: மனைவியை கொலை செய்து விட்டு, தற்கொலை என கணவன் நாடகமாடிய சம்பவம் ஒன்று சென்னையில் அரங்கேறியுள்ளது. 

  சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரை  சேர்ந்த மாரியப்பனுக்கும் விக்னேஷ்வரி என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இறுக்கத்துடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மாரியப்பன், மனைவி விக்னேஷ்வரியை பிடிக்காமல் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். 

  killed

  இதனையடுத்து சேலையூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்குக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால்  விக்னேஷ்வரி தன் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்று எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. இதனால் கணவன் மனைவி பிரச்சனையில் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதியுள்ளனர். ஆனால்  பிரேத பரிசோதனையில் விக்னேஷ்வரி கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.

  suicide

  இதனடிப்படையில் கணவன் மாரியப்பனை விசாரித்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் அவரிடம் போலீசார் கிடுக்கு பிடி விசாரணையை மேற்கொண்டதில், அவர் விக்னேஷ்வரியை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். 

  arrest

  அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், குடும்ப பிரச்சனையில், மனைவியிடம் கடிதம் ஒன்றை எழுதி வாங்கிக் கொண்டு கழுத்தைக் கயிற்றால் இறுக்கி கொலை செய்து தூக்கிட்டு நடனமாடியதாகக் கூறியுள்ளார். 
  திருமணம் ஆகி 8 மாதங்களே  ஆன நிலையில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  இதையும் வாசிக்க: கேன்சர் எனக்கு உயிர் பயத்தை அளிக்கவில்லை; பசார் இந்தியா மாடலான சோனாலி